Home /local-news /

ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்துக்கு வழிகாட்டி போர்டுகள் அவசியம் - மக்கள் கோரிக்கை

ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்துக்கு வழிகாட்டி போர்டுகள் அவசியம் - மக்கள் கோரிக்கை

ஆஸ்டின்பட்டி

ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்துக்கு வழிகாட்டி போர்டுகள் அவசியம் - மக்கள் கோரிக்கை

திருப்பரங்குன்றம், திருநகர் புறநகர் பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் சமூக விரோதச் செயல்களும் குற்றச் சம்பவங்களும் அதிகம். மேலும், திருமங்கலம் நான்கு வழிச் சாலைப் பகுதியில் சாலை விபத்துகள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.

    இந்த வழக்குகள் பெரும்பாலும் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்படுவதால் ஆஸ்டின்பட்டி ஸ்டேசனுக்கு தினமும் ஏராளமானோர் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், மதுரை ஆஸ்டின்பட்டியில் சமீபத்தில்தான் புதிய இடத்தில் காவல் நிலையம் கட்டப்பட்டு திறந்து வைக்கப் பட்டது. ஆனால், ஏற்கெனவே காவல் நிலையம் வந்து சென்றவர்கள் பழைய ஆஸ்டின்பட்டி காவல் நிலையப் பகுதியைத் தேடிச் சென்று விடுகின்றனர்.

    வழிகாட்டி போர்டுகள் இல்லாததாலும் அந்தப் பொட்டல் பகுதியில் சரியாக வழிசொல்ல ஆளில்லாததாலும் வெளியூர்க்காரர்கள் திக்குத் தெரியாமல் திரும்பிச்சென்ற கதைகளும் நடந்துள்ளன.

    மேலும், நான்கு வழிச் சாலையில் இருந்தும், கூத்தியார்குண்டு சாலையில் இருந்தும் மொத்தமாக இரண்டு பாதைகள் காவல் நிலையத்துக்குச் செல்கின்றன. ஆனால் இரண்டும் மண்ணும் புழுதியும் கலந்த சாலையாக கிடக்கிறது.

    மேலும் அந்தச் சாலைகளில் பெயரளவிற்குகூட போர்டுகள் எதுவும் பொருத்தப்படவில்லை. கோரிக்கை, புகார் என வருகிற மக்கள் ஸ்டேசனைத் தேடிக் போராட வேண்டி உள்ளது.

    காவல் நிலைய எழுத்தரிடம் இதுகுறித்து கேட்டபோது போர்டுகள் தயாராக உள்ளது. விரைவில் பொருத்திவிடுவோம் எனக் கூறினார். ஒதுங்க நிழலும், பயணிக்க வாகனமும் இன்றி தொலைதூரம் நடந்து வரும் மக்களுக்கு வழிகாட்டி போர்டாவது ஆறுதல் தரவேண்டும் என்பது இங்குள்ள மக்களின் கோரிக்கை.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி