Home /local-news /

ஆரப்பாளையம் டிடி ரோடு பகுதியில் ஆபத்தான சந்திப்பு - நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

ஆரப்பாளையம் டிடி ரோடு பகுதியில் ஆபத்தான சந்திப்பு - நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

ஆரப்பாளையம்

ஆரப்பாளையம் டிடிரோடு பகுதியில் ஆபத்தான சந்திப்பு - அதிகாரிகள் நடவடிக்கை தேவை

மதுரை ஆரப்பாளையம் டி.டி.ரோடு பகுதியில் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் ஆபத்தான சந்திப்பை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மதுரை ஆரப்பாளையம் டி.டி.ரோடு பகுதியில் வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் ஆபத்தான சந்திப்பை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் நடக்கின்றன. அதன்படி மதுரை நகரில் வைகை ஆற்றின் இருபுறமும் கரையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

    ஆரப்பாளையம் பகுதியில் இந்த சாலைப் பணி முடிந்துள்ளது. இருப்பினும் சாலை சந்திப்பு பகுதியை சரிவர அமைக்காததால் டிடி ரோடு ஸ்மார்ட் சிட்டி பைபாஸ் சந்திப்பு விபத்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு செல்லும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்துமே இந்த குறுகிய சந்திப்பில் 'கட்' அடிக்கின்றன. குறிப்பாக பேருந்துகள் இந்த சந்திப்பை குறுக்கும் நெடுக்குமாக கடக்கின்றன.

    பைபாஸ் சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் வந்து செல்லும் நிலையில், இந்தக் குறுகலான சந்திப்பில் பேருந்துகள் நுழைந்து திரும்புவது ஆபத்துக்கு வழி வகுக்கும் என்பது வாகன ஓட்டிகளின் கருத்து.

    குறைந்தபட்சம் சந்திப்புக்கு முன்பாகவே பைபாஸ் சாலையில் பெரிகேடுகள் வைக்க வேண்டும். இல்லையென்றால் முறையாக பாதுகாப்பு செய்யும் வரையிலும் அந்த சந்திப்பை தற்காலிகமாக அடைத்து வைக்க வேண்டும்.

    விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் கவனக் குறைவும் காரணமாகிவிடக் கூடாது என குமுறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai, Road Safety

    அடுத்த செய்தி