Home /local-news /

மதுரை சிந்தாமணி ரோடு அரிசி ஆலையில் நள்ளிரவு தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

மதுரை சிந்தாமணி ரோடு அரிசி ஆலையில் நள்ளிரவு தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!

Madurai News | மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    துரை அனுப்பானடி சிந்தாமணி ரோட்டில் அமைந்துள்ள குமரேசன் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலையில் ஜன.,21 அன்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    நள்ளிரவு 11.54 மணியளவில் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்து தீயணைப்பு வீரர்கள் ஊர்திகளுடன் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். சுமார் ஒன்றரை மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.

    மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத தீவிபத்தால் பல டன்கள் உடைய அரிசி கொள்கலன் கண்டெயினர் சரிந்திருந்தது. தீயணைப்புக்குப் பின்னர், அவற்றை அப்புறப்படுத்தத் தொடங்குகையில்தான் அதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    தீ விபத்து மற்றும் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி மக்களிடையே பதற்றத்தையும். அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி