Home /local-news /

மதுரை : ஆவின் பால்வண்டியை திருடிய கோவை இளைஞர் - சேஸ் செய்து பிடித்த காவல் தனிப்படை

மதுரை : ஆவின் பால்வண்டியை திருடிய கோவை இளைஞர் - சேஸ் செய்து பிடித்த காவல் தனிப்படை

மதுரை : ஆவின் பால்வண்டியை திருடிய கோவை இளைஞர் - சேஸ் செய்து பிடித்த காவல் தனிப்ப

மதுரை : ஆவின் பால்வண்டியை திருடிய கோவை இளைஞர் - சேஸ் செய்து பிடித்த காவல் தனிப்ப

மதுரை நகரில் தினமும் அதிகாலையில் ஆவின் பால் வண்டிகள் அந்தந்த டிப்போக்களுக்கு சென்று பால் பாக்கெட்டுகள் விநியோகித்து வருகின்றன.

    துரை நகரில் தினமும் அதிகாலையில் ஆவின் பால் வண்டிகள் அந்தந்த டிப்போக்களுக்கு சென்று பால் பாக்கெட்டுகள் விநியோகித்து வருகின்றன.

    அப்படி அண்ணாநகர் பகுதியில் பால் வண்டி வந்துள்ளது. அதனை கே.கே நகர் சுப்பையா காலனியைச் சேர்ந்த 39 வயதான முனிராஜ் ஓட்டிவந்துள்ளார். அப்பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு வந்து பார்த்தபோது,  வாகனத்தை காணவில்லை.

    உடனடியாக முனிராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். திருட்டு விபரம் ரோந்து பணி காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. சாலை முழுவதும் உஷார் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

    தெற்குவாசல் பகுதியில் அந்த வேன் சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படையினர் பால் வேனை விரட்டத் தொடங்கினர்.

    இந்த சேஸிங்கில் பால் வண்டியை திருடிய நபர் வண்டியை வேகமாக செலுத்த முயன்றதில் பால் வண்டி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், பால் வண்டியில் இருந்தவரை வளைத்துப் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் பால் வேனில் இருந்த திருட்டு நபர் கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞரான சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சதீசை கைது செய்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாலையில் நடந்த இந்த பால் வண்டி திருட்டு மற்றும் காவல்துறை சேஸிங் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    Published by:Alagesan R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி