Home /local-news /

ஆழ்வார்புரம் : மின்னொளியில் ஜொலிக்க தயாராகும் ஏவி மேம்பாலம்

ஆழ்வார்புரம் : மின்னொளியில் ஜொலிக்க தயாராகும் ஏவி மேம்பாலம்

ஆழ்வார்புரம்

ஆழ்வார்புரம் : மின்னொளியில் ஜொலிக்க தயாராகும் ஏவி மேம்பாலம்

Madurai : மதுரையில் பழமையும் பெருமையும் மிகுந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் மின்னொளியில் ஜொலிப்பதற்கு தயாராகி வருகிறது.

    துரையில் பழமையும் பெருமையும் மிகுந்த ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் மின்னொளியில் ஜொலிப்பதற்கு தயாராகி வருகிறது.

    ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மதுரை ஏவி பாலம் எனப்படுகிற ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் மிகவும் அழகும் ரம்மியமும் மிகுந்த பாலம். இந்தப் பாலம் இனி மின்னொளியில் ஜொலிக்க உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும் நாளன்று மற்றும் இந்த ஏவி பாலம் மிகவும் அழகாக மின்னொளியில் ஜொலிக்கும். இதை நிரந்தர ஏற்பாடாக செய்ய அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.

    மாநகராட்சி ஏற்பாட்டில் இந்தப் பாலத்தின் ஆழ்வார்புரம் சாலை பகுதியில் ஒரு ஆர்ச் மட்டும் வர்ணப் பூச்சு வேலைகள் செய்து மின் விளக்குகள் அமைப்பதற்கான சாரங்கள் கட்டி ஏற்பாடு செய்துள்ளனர்.

    இந்த அலங்கார மின் விளக்கு ஒத்திகை வெற்றிபெறுமெனில் விரைவில் காலம் முழுமைக்கும் இந்த அலங்கார ஏற்பாடுகள் செய்து, தொடர்ந்து மதுரை ஏவி பாலம் விரைவில் ஜொலிக்கும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Suresh V
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி