மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பதிவு செய்ய வலம் வந்தோம்.
வாடிவாசலுக்கு அடுத்த தெருப் பகுதியில் வரிசையாக ஆம்புலன்ஸ் நிறுத்த வழி செய்யப்பட்டு சுழற்சி முறையில் ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகின்றன. அருகில் உள்ள சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, ராஜாஜி மருத்துவமனை என சிகிச்சைக்கு காயம் பட்ட வீரர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
காவலர்கள் பூத் அமைத்து காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எதவித அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாத வண்ணம் காவலர்கள் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை வழிநடத்தி வருகின்றனர். குறிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நிகழாத வகையில் காவல்துறை நடவடிக்கை அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.