ஜல்லிக்கட்டு போராட்டத்தையொட்டி அலங்காநல்லூர் இளைஞர்கள் சிலர் இணைந்து ஜல்லிக்கட்டு காளை வாங்கி வளர்த்து வருகின்றனர். அக்காளைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மதுரை உலகப்புகழ் அலங்காநல்லூரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது.சென்னையில் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் பெரும் தன்னெழுச்சி போராட்டம் நடந்தது.
இந்த காலகட்டத்தில் அலங்காநல்லூர் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி வளர்க்கத் தொடங்கினர். அதற்கு கரிகாலன் எனவும் பெயர் சூட்டினர். காளை கரிகாலனுக்கு நேற்று ஐந்தாம் ஆண்டாக பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் ஜல்லிகட்டு காளையை அலங்கரித்து "கரிகாலன்" என்ற காளையின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் ரெடி செய்து வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி விழா விமரிசையாக நடைபெற்றது
பின்னர் அசைவ உணவுகள் கிராம மக்களுக்கு அன்னதானமாக இளைஞர்கள் வழங்கினர். ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய நிகழ்வை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் கண்டு சென்றனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.