மதுரையில் வலிமை படத்துக்காக அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடக்க இருக்கிற சித்திரை திருவிழாவின் முன்னோட்டமாக வலிமை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் என்ற வசனம் அடங்கிய போஸ்டர்
மதுரை மக்களை 'அட!' போட வைத்துள்ளது.
தமிழகம் உட்பட உலகமெங்கும் நான்கு மொழிகளில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம், இன்று பிப்ரவரி 24 அன்று வெளியாகி உள்ளது என கொண்டாடும் பலரும் ரசிகர்கள் பலரும் தியேட்டர் முன்பு ஆட்டம் பாட்டம் என கலக்கி வருகின்றனர்.
இந்நிலையில், வலிமை பட வெளியீட்டை வரவேற்கும் விதமாக மதுரை நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை என்றாலே போஸ்டர்களுக்கு பெயர் போன நகரம் என்றும் கூறப்படுவதுண்டு. இப்படி மதுரையில் எந்த காரணத்திற்காக ரசிகர்கள் தொண்டர்கள் போஸ்டர் ஒட்டினால் அதன் தனித்தன்மை கிரியேட்டிவிட்டி கட்டாயம் இடம்பெறும்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் நகரெங்கும் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பலவும், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக மதுரையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.
இந்த சித்திரை திருவிழாவின் முன்னோட்டமாக வலிமை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் என அழகர் தங்க குதிரை வாகன படத்தையும் அதை அஜித் வணங்கும் விதத்திலும் எடிட் செய்து, ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரை மக்கள் பலரையும் ரசிக்கச் செய்துள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.