Home /local-news /

மதுரை நகரில் காவல் ஆய்வாளர்கள் 19 பேர் இடமாற்றம் - காவல் ஆணையர் சின்ஹா அதிரடி!

மதுரை நகரில் காவல் ஆய்வாளர்கள் 19 பேர் இடமாற்றம் - காவல் ஆணையர் சின்ஹா அதிரடி!

மதுரை நகரில் காவல் ஆய்வாளர்கள் 19 பேர் இடமாற்றம் - காவல் ஆணையர் சின்ஹா அதிரடி!

மதுரை நகரில் காவல் ஆய்வாளர்கள் 19 பேர் இடமாற்றம் - காவல் ஆணையர் சின்ஹா அதிரடி!

துரை நகரில் பணியாற்றி வருகிற காவல் ஆய்வாளர்கள் 19 பேரை இடமாற்றம் செய்து அதரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

அதன்படி, திடீர்நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஸ்டெல்லாபாய் கீரைத்துரை குற்றப்பிரிவுக்கு மாற்றம். ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் கதிர்வேல் தீவிர குற்றப்பிரிவுக்கு மாற்றம்.

சிஆர்பி ஆய்வாளர் திலகவதி திருப்பாலைக்கும், திருப்பாலை ஆய்வாளர் எஸ்தர் தேர்தல் பிரிவுக்கும் மாற்றம்.

கரிமேடு ஆய்வாளர் சரவணக்குமார் நிலஅபகரிப்பு பிரிவுக்கும், நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர் சேதுமணி மாதவன் கரிமேடு குற்றப்பிரிவுக்கும் மாற்றம்.

சுப்ரமணியபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா அனைத்து மகளிர் டவுனுக்கும், அனைத்து மகளிர் டவுன் ஆய்வாளர் கீதாலட்சுமி சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவுக்கும் மாற்றம்.

எஸ். எஸ்.காலனி குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வி பெண்கள் - குழந்தைகள் பிரிவுக்கும், பெண்கள் - குழந்தைகள் பிரிவு ஆய்வாளர் பிளவர்ஷீலா கூடல்புதூர் குற்றப் பிரிவுக்கும் மாற்றம்.

புதூர் ஆய்வாளர் வசந்தா மீனாட்சியம்மன் கோயில் குற்றப்பிரிவுக்கும், மீனாட்சியம்மன் கோயில் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராதிகா தெற்குவாசல் குற்றப்பிரிவுக்கும், தெற்குவாசல் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி மாட்டுத்தாவணிக்கும் மாற்றம்.

சுப்ரமணியபுரம் சட்டம் - ஒழுங்கு ஆய்வாளர் கணேசன் மீனாட்சியம்மன் கோயில் காவல் நிலையத்துக்கும், மீனாட்சியம்மன் கோயில் ஆய்வாளர் வடிவுக்கரசி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கும்,

உயர்நீதிமன்ற கிளை காவல் ஆய்வாளர் ரவீந்திரன் திடீர்நகர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், திடீர்நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சுரேஷ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் மாற்றம்.

கீரைத்துரை ஆய்வாளர் பெத்துராஜ் நுண்ணிறிவு பிரிவுக்கும், நுண்ணறிவு பிரிவு வசுமதி கண்ட்ரோல் ரூமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
Published by:Murugesh M
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி