Home /News /local-news /

மாட்டுத்தாவணி : நடத்துநர் இன்றி ரூட்டில் இயங்கிய சிட்டி பஸ்; பயணிகள் அவதி

மாட்டுத்தாவணி : நடத்துநர் இன்றி ரூட்டில் இயங்கிய சிட்டி பஸ்; பயணிகள் அவதி

மாட்டுத்தாவணி : நடத்துநர் இன்றி ரூட்டில் இயங்கிய சிட்டி பஸ்; பயணிகள் அவதி

மாட்டுத்தாவணி : நடத்துநர் இன்றி ரூட்டில் இயங்கிய சிட்டி பஸ்; பயணிகள் அவதி

Madurai News | பேருந்தில் 30 பேர் பயணித்த நிலையில் நடத்துனர் வர தாமதமானதால் மாற்றுப் பேருந்தில் பயணிகள் அனைவரும் சென்றுள்ளனர்.

    துரை மாட்டுத்தாவணி - திருமங்கலம் ரூட் அரசு நகரப் பேருந்து TN 58 N 0619 ஜன.,11 அன்று மாலை 4.45 மணியளவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டது. எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து நடத்துனர் இல்லாமல் கிளம்பியது.

    இதுகுறித்து பயணிகள் ஓட்டுநரிடம் அறிவுறுத்தியதாக தெரிகிறது. அதைப் பொருட்படுத்தாமல் பேருந்தை ஓட்டுநர் இயக்கியதாகக் கூறப்படுகிறது. பயணி ஒருவர் டிக்கெட் எடுக்க வேண்டும் எனக் கேட்டதற்கு நடத்துநர் இல்லை என ஓட்டுநர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ரூட்டில் இரண்டு ஸ்டாப்புகள் கடந்து பேருந்து சாலையிலேயே 15 நிமிடங்களுக்கும் மேலாக நின்றுள்ளது. சுமார் 15 நிமிடம் தாமதத்துக்கு பின்னர் நடத்துனர் வேறு ரூட் பேருந்து மூலம், திருமங்கலம் பஸ் நின்றிருந்த விரைவு பேருந்து பணிமனை ஸ்டாப்புக்கு வந்துள்ளார்.

    பேருந்தில் 30 பேர் பயணித்த நிலையில் நடத்துனர் வர தாமதமானதால் மாற்றுப் பேருந்தில் பயணிகள் அனைவரும் சென்றனர். நடத்துநர் இல்லாமல் சுமார் பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக நடுரோட்டில் பேருந்து நின்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும் இதுகுறித்து பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசியபோது ஓட்டுநர், நடத்துநர் இருவரும் தவறை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் மீது முறையாக துறைரீதியிலான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்றனர்.

    தனிப்பட்ட காழ்ப்பு, விருப்பு வெறுப்பினை மக்கள் சேவையாற்றும் அரசு ஊழியர்கள் வெளிக்காட்டுவது நேரடியாக பொதுமக்களையே பாதிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காதிருக்க அதிகாரிகளின் மேற்பார்வை அவசியம் என்கின்றனர் பொது மக்கள்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி