தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடக்கிறது. பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன
இது தொடர்பான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதுமே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்றுவது, விளம்பரப் படங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஏற்கனவே அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.