மதுரை மேலூர் அருகே கம்பூர் ஊராட்சி தேனக்குடிபட்டியில் சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் சுற்றிதிரிந்த நாயை லாவகாமாக கவ்வி விழுங்கியது.
நாயை விழுங்கியதால் நகர முடியாத மலைப்பாம்பு அந்த இடத்திலேயே கிடந்தது. இதனை அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் கண்டு உடனே கொட்டாம்பட்டி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் வீரணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பைப் பிடிக்க முயற்சித்தனர்.
அப்போது, விழுங்கிய நாயை மலைப்பாம்பு வெளியே உமிழ்ந்தது. பின்னர் மலைப்பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இரைதேடி வந்த மலைப்பாம்பு நாயை விழுங்கிய இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், கால்நடைகளுக்கு அச்சுறுத்தல் வாய்ப்பு உள்ளதால் வன உயிரினங்கள் நடமாட்டத்தை வனத்துறை கண்காணிக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.