Home /local-news /

மதுரை : வீட்டில் மின்கசிவால் தீ விபத்து - பரபரப்பு நிமிடங்கள்

மதுரை : வீட்டில் மின்கசிவால் தீ விபத்து - பரபரப்பு நிமிடங்கள்

வீட்டில் மின்கசிவால் தீ விபத்து - பரபரப்பு நிமிடங்கள்

வீட்டில் மின்கசிவால் தீ விபத்து - பரபரப்பு நிமிடங்கள்

மதுரை பைபாஸ் ரோடு நேருநகர் கலைமகள் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சுந்தரி 62 வயது. இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார் நேற்று (பிப்.22) இரவு 7 மணியளவில் சுந்தரி  வீட்டில் கரும்புகை கிளம்பியுள்ளது. 

    துரை பைபாஸ் ரோடு நேருநகர் கலைமகள் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் சுந்தரி 62 வயது. இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார் நேற்று (பிப்.22) இரவு 7 மணியளவில் சுந்தரி வீட்டில் கரும்புகை கிளம்பியுள்ளது.

    அவர் இதனைக் கண்டதும் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அக்கம்பக்கத்தினர் மதுரை பெரியார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    ஆனால், அந்தத் தெருவுக்குள் செல்ல சாலை குறுகலாக இருந்ததால் பெரிய தீயணைப்பு வாகனம் உள்ளே நுழைய முடியவில்லை. இருப்பினும் தாமதிக்காமல் உடனடியாக நிலையத்திலிருந்து சிறிய ரக வாகனத்தை வரவழைத்தனர்.

    சிறிய ஊர்தியை பயன்படுத்தி, வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது. வீட்டில் கிரைண்டர், மிக்ஸி மற்றும் ஆர்.ஓ.மோட்டார் உள்ளிட்டவை தீயில் கருகி சாம்பலாகின.

    தங்கள் சேவையை முடித்த தீயணைப்பு துறையினர் அங்கு கூடியிருந்த பெண்களை தீ விபத்து ஏற்படாதபடி வீட்டைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    மேலும், தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், 'இரவு நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். இரவு தூங்கும் முன் கேஸ் ரெகுலேட்டரை அணைத்து வைத்து விடுங்கள். ஒரே ஃபிளக்கு பாயிண்டில் மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட உயர் மின்அழுத்த இணைப்புகளை கொடுக்க வேண்டாம்' என்றார்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன் - மதுரை
    First published:

    Tags: Accident, Fire, Madurai

    அடுத்த செய்தி