மதுரை கோவலன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன். ரமண மகரிசி கார்டன் தெருவில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். ஜன.,17 அன்று மதிய நேரம் மனைவி, மகனுடன் வீட்டில் இருந்தபோது வீட்டு நாய் 'பிங்கி' நீண்டநேரம் குறைத்துக் கொண்டே இருந்தது.
சந்தேகமடைந்த வெங்கடகிருஷ்ணன் வெளியே பார்த்தபோது சுமார் 3 அடி நீள நல்லபாம்பு படமெடுத்தபடி நின்றிருந்தது. இதைக்கண்டு அதிர்ந்துபோன வெங்கடகிருஷ்ணன் ஈஷா பாம்புபிடி நண்பர்களுக்கு தகவலளித்தார். பாம்புபிடி நண்பர் வந்து பாம்பைப் பிடித்து பத்திரமாக வனப் பகுதியில் விட்டார்.
வீட்டுக்குள் பாம்பு வருவதைக் கண்ட 'பிங்கி' தன் உயிரை துச்சமாக எண்ணி தன் உரிமையாளரை காப்பாற்ற நினைத்தது. அந்த பாம்பை குரைத்தே தடுத்து நிறுத்தியதை எண்ணி ஆனந்தக் கண்ணீரோடு செல்ல நாய் 'பிங்கி'யைக் கொஞ்சுகிறார், வெங்கடகிருஷ்ணன்.
இரவில் எப்பொழுதாவது பாம்பு இங்கு வரும் ஆனால் இன்று பகல் நேரத்திலேயே வந்தது பெரும் அதிர்ச்சி. அதோடு, வீட்டுக்குள் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு நுழைவதை தடுத்து தனது உயிரை பணையம் வைத்து எங்கள் உயிரை இந்த ஜீவன் காப்பாற்றியுள்ளது என வெங்கடகிருஷ்ணன் தனது 'பிங்கி'யை அள்ளி எடுத்துக் கொண்டார்.
செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.