Home /News /local-news /

மேலமடை : கார் மோதியதில் டூவீலரில் வந்த கல்லூரி மாணவி பலி 

மேலமடை : கார் மோதியதில் டூவீலரில் வந்த கல்லூரி மாணவி பலி 

Local18

Local18

மருந்துவ ஆய்வு சம்பந்தமாக மாதங்கியும், தோழியும் ஜன.,11 அன்று மாலை டூவீலரில் புறப்பட்டு சென்று பணிகளை முடித்துவிட்டு திரும்பினர்.

    மேலமடை : கார் மோதியதில் டூவீலரில் வந்த கல்லூரி மாணவி பலி மதுரை கோச்சடை நடராஜ் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் மாதங்கி. 22 வயதான இவர் பி.பி.குளத்திலுள்ள தனியார் கல்லூரியில் படிப்பு முடித்து மேற்படிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    மருந்துவ ஆய்வு சம்பந்தமாக மாதங்கியும், தோழியும் ஜன.,11 அன்று மாலை டூவீலரில் புறப்பட்டு சென்று பணிகளை முடித்துவிட்டு திரும்பினர். வழியில் மானகிரி அருகே வந்தபோது பின்னால் கார் ஒன்று டூவீலர் மீது பலமாக மோதியதாகத் தெரிகிறது.

    நிலைதடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த மாதங்கி அங்கிருந்த பொதுமக்களால் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகும் சிகிச்சை பலனின்றி மாதங்கி ஜனவரி 12 அதிகாலை உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தக் காரை ஓட்டி வந்தவரிடம் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி