Home /local-news /

சித்திரை திருவிழா - கள்ளழகர் ரூட் லைவ் அப்டேட்டுக்கு 'டிராக் அழகர்' ஆப்

சித்திரை திருவிழா - கள்ளழகர் ரூட் லைவ் அப்டேட்டுக்கு 'டிராக் அழகர்' ஆப்

சித்திரை திருவிழா - கள்ளழகர் ரூட் லைவ் அப்டேட்டுக்கு 'டிராக் அழகர்' ஆப்

சித்திரை திருவிழா - கள்ளழகர் ரூட் லைவ் அப்டேட்டுக்கு 'டிராக் அழகர்' ஆப்

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி வரும் 14-ம் தேதி மாலை கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். அவர் எப்போது எந்த மண்டகப்படியில் இருப்பார் என்பதை அறியும் வகையில் ட்ராக் அழகர் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

    துரை சித்திரைத் திருவிழாவையொட்டி வரும் 14-ம் தேதி மாலை கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். அவர் எப்போது எந்த மண்டகப்படியில் இருப்பார் என்பதை அறியும் வகையில் ட்ராக் அழகர் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

    மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதன் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வருகிற 14ம்  தேதியும் அதற்கடுத்த தினம் தேரோட்டமும் நடைபெறும். கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா 12ம் தேதி தொடங்குகிறது.

    வருகிற 14ம் தேதி மாலை அழகர்மலை சுந்தரராஜபெருமாள் மதுரைக்கு கள்ளழகர் வேடமிட்டு புறப்படுகிறார். எதிர்சேவை, ஆற்றில் இறங்குதல், தீர்த்தவாரி, சாபவிமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு 19-ம் தேதி காலை மலைக்கு புறப்பட்டு 20-ம் தேதி காலை மலையை அடைகிறார்.

    இந்த பயண நாட்கள் முழுக்க அழகர் எப்போது எந்த மண்டகப்படியில் இருக்கிறார் என்பதை பக்தர்கள் அறிந்து கொள்ள வசதியாக டிராக் அழகர்( track azhagar) செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி