பிறந்து ஏழு நாட்களே ஆகியிருந்த பெண் குழந்தையை தொப்புள்கொடியோடு விளாச்சேரி கண்மாயில் வீசிக் கொன்றவர்களை தீவிரமாகத் தேடிவருகிறது காவல்துறை.
தொப்புள்கொடி அறுபடாத நிலையில் பச்சிளம் பெண்குழந்தை உடல், விளாச்சேரி கண்மாயில் மிதப்பதாக நேற்று காலை திருநகர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்வதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முறை தவறிய உறவால் பிறந்த குழந்தையா? அல்லது குழந்தையைக் கடத்திச்சென்று வீசிக் கொன்றுள்ளார்களா? என பல்வேறு கோணங்களிலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.