Home /local-news /

அட்சய திருதியை.. திக்முக்காடிய தெற்காவணி வீதி!

அட்சய திருதியை.. திக்முக்காடிய தெற்காவணி வீதி!

தங்கம் மூலதனம்; தெய்வீகம்

'தங்கம் மூலதனம்; தெய்வீகம்' -  களைகட்டும் அட்சய திருதியை... திக்குமுக்காடும் தெற

Madurai District: தமிழகமெங்கும் அட்சய திருதியை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி தங்கம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும், பொருள்கள் சேரும் என்பது ஐதீகம். 

    மிழகமெங்கும் அட்சய திருதியை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி தங்கம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும், பொருள்கள் சேரும் என்பது ஐதீகம்.

    அதன்படி ஏராளமான மக்கள் அதிகாலை தொடங்கி தங்கநகை கடைகளில் குவிந்து வருகின்றனர். தங்கம் உள்ளிட்ட எந்த பொருள் வாங்கினாலும் வெள்ளி இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட சலுகைகள் அட்சய திருதியை முன்னிட்டு பல்வேறு தங்க நகை கடைகள் தள்ளுபடிகளை வாரி வழங்கியுள்ளனர்.

    தங்கள் ஊரிலிருந்து பெண்கள் குடும்பமாகவும், உறவுக்கார மகளுக்கு நகை புடவை உள்ளிட்டவை எடுக்கவும் என வாடிக்கையாளர்கள் பலரும் தெற்கு ஆவணி மூல வீதியில் சூழ்ந்தனர். அந்தப் பகுதி முழுக்கவே போக்குவரத்து நெரிசலில் திண்டாடி வருகிறது. அங்கு ஜன நெருக்கடி கூடியுள்ளது.

    செந்தில்முருகன் ஜுவல்லரி இயக்குனரிடம் பேசியபோது \"இரண்டு ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தில் அட்சயதிருதியை அவ்வளவாக மக்கள் யாரும் கொண்டாட முடியாமல் போனது. வியாபாரிகளான நாங்களும் மிகவும் வருத்தமுற்றோம்.

    ஆனாலும் இந்த முறை வியாபாரிகள் யாரும் அறிவிக்காமலேயே மக்களாக தன்னெழுச்சி முறையில் வந்து நகைகள் வாங்க குவிந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விலையும் இந்த சூழலுக்கேற்ப கணிசமாக குறைந்து இருப்பதால் தங்கம் வாங்கும் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி காண முடிந்தது.

    தங்கம் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரை தங்கம் என்பது மூலதனம் நம் நாட்டுப் பெண்களுக்கு தங்கம் தெய்வீகம் பொருளாதார வீக்கத்தையும் சமாளிக்கும் வழி என்பதால் தங்கத்தை ஒவ்வொரு குடும்பமும் மேலானதாக மதிக்கின்றனர்\" என்றார்.

    செய்தியாளர் : மு. முத்துக்குமரன், மதுரை
    Published by:Arun
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி