Home /local-news /

அறிவிப்பு: அழகர்கோயில் சாலையில் பிப்.20 முதல் போக்குவரத்து மாற்றம்!

அறிவிப்பு: அழகர்கோயில் சாலையில் பிப்.20 முதல் போக்குவரத்து மாற்றம்!

முக்கிய அறிவிப்பு : அழகர்கோயில் சாலையில் பிப்.20 முதல் போக்குவரத்து மாற்றம்!

முக்கிய அறிவிப்பு : அழகர்கோயில் சாலையில் பிப்.20 முதல் போக்குவரத்து மாற்றம்!

நத்தம் ரோடு மேம்பாலப் பணிகளால் அழகர்கோயில் சாலை பகுதி போக்குவரத்து மாற்றம் பிப்.20 முதல் அமல்படுத்தப்படுகிறது. அவுட்போஸ்ட், தல்லாகுளம் பெருமாள்கோயில் பகுதி என அழகர்கோவில் சாலை முழுக்கவே போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    த்தம் ரோடு மேம்பாலப் பணிகளால் அழகர்கோயில் சாலை பகுதி போக்குவரத்து மாற்றம் பிப்.20 முதல் அமல்படுத்தப்படுகிறது. அவுட்போஸ்ட், தல்லாகுளம் பெருமாள்கோயில் பகுதி என அழகர்கோவில் சாலை முழுக்கவே போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நத்தம் சாலை அழகர்கோயில் சாலை பகுதியில் இருந்து கோரிப்பாளையம் செல்லவேண்டிய வாகனங்கள் வழக்கமாக அழகர் கோவில் அவுட் போஸ்ட் இலிருந்து அழகர்கோவில் சாலை நோக்கி நேரடியாக வந்துவிடும் அந்தப் பாதை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

    நத்தம் சாலை வாகனங்கள் எஸ்பி.,பங்களா பகுதியில் இடதுபுறம் திரும்பி பாரதி உலா ரோடு வழியாக தாமரைத் தொட்டி செல்ல வேண்டும். அழகர்கோவில் சாலையில் இருந்து வரும் வாகனங்களும், தாமரை தொட்டியில் வந்து சேர்ந்திருக்கும் நத்தம் ரோடு வாகனங்களும் மொத்தமாக ரேஸ்கோர்ஸ் ரோடு, முத்தையா மன்றம், அவுட்போஸ்ட் வழியாக அழகர்கோயில் சாலை சென்று கோரிப்பாளையம் அடையலாம். மேலூர் சாலையில் இருந்து கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் வழக்கமான பாதையில் செல்லலாம்.

    கோரிப்பாளையத்தில் இருந்து அழகர்கோயில், மேலூர் செல்லும் வாகனங்களுக்காக அழகர்கோயில் ரோட்டில் தல்லாகுளம் பெருமாள் கோயில் முதல் அவுட்போஸ்ட் வரை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    அழகர்கோயில் செல்லும் வாகனங்கள் கிருஷ்ணன் கோயில் வடக்கு வீதி வழியாக தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதியை அடைந்து அழகர்கோவில் சாலையில் அவுட்போஸ்ட் சென்று பயணம் தொடரலாம்.

    மேலூர் செல்ல வேண்டிய வாகனங்கள் அழகர்கோயில் வாகனங்களில் புதிய ரூட்டில் சென்று பாரதிபூங்கா எதிரே உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி சாலை வழியாக ராஜா முத்தையா மன்றம் சென்று மேலூர் செல்லலாம்.

    மேலூர் ரோடு பகுதியில் இருந்து நத்தம் ரோடு செல்ல வேண்டிய வாகனங்கள் அவுட் போஸ்ட் சந்திப்பில் இருந்து வலது புறம் அழகர்கோயில் சாலையில் திரும்பி பாரதியார் பூங்கா வழியாக பி டி ஆர் சிலை ரவுண்டானா வழியாக நத்தம் சாலையை அடையலாம்.

    ஜவகர் ரோடிலிருந்து அவுட்போஸ்ட் சந்திப்புக்கு நேரடியாக வரும் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. பிடிஆர் சிலை சந்திப்பில் இருந்து இடதுபுறம் நத்தம் சாலையை அடைந்து பாரதி உலா ரோடு, தாமரை தொட்டி, ரேஸ்கோர்ஸ் ரோடு, ராஜா முத்தையா மன்றம், அவுட்போஸ்ட் வழியாக கோரிப்பாளையம் செல்லலாம்.

    மற்றபடி ஓசிபிஎம் பள்ளிப் பகுதியில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் வாகனங்களும் கோரிப்பாளையம் பகுதியில் இருந்து நத்தம் செல்லும் வாகனங்களும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதையையே பயன்படுத்தலாம்.

    பால பணிக்காக மாற்ற மாற்றங்கள் தேவை என்றாலும் இது கொஞ்சம் சிக்கலும் நெருக்கடியும் மிகுந்த மாற்றமாக படுகிறது என போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளிடம் கேட்டோம். மேலும் இதற்கு பதிலாக தமுக்கம் காந்தி மியூசியம் ரோட்டை, அழகர்கோவில் சாலை மேலூர் சாலை வாகனங்கள் கோரிப்பாளையம் வருவதற்கு பயன்படுத்தலாமே என கோரிக்கை விடுத்திருந்தோம். அது மிகவும் எளிமையான திட்டம் எனவும் கூறியிருந்தோம்.

    ஆனால், அது கலெக்டர் சென்றுவர வேண்டிய பாதை, அவசர காலத்திற்கு பயன்படுத்த வேண்டியது. எனவே அங்கு போக்குவரத்து நெருக்கடியை அனுமதிப்பது முடியாது. இந்தத் திட்டமே பிப்.20 முதல் அமல்படுத்தப்படும் என திட்டவட்டமாக போக்குவரத்து காவல் உயரதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன்- மதுரை
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Madurai, Traffic

    அடுத்த செய்தி