Home /local-news /

அலங்காநல்லூர் : பயலுக நடத்தும் புது ஜல்லிக்கட்டு - மாட்டு பொட்டல் மிரட்டல்!

அலங்காநல்லூர் : பயலுக நடத்தும் புது ஜல்லிக்கட்டு - மாட்டு பொட்டல் மிரட்டல்!

அலங்காநல்லூர்:

அலங்காநல்லூர்: பயலுக நடத்தும் புது ஜல்லிக்கட்டு - மாட்டு பொட்டல் மிரட்டல்!

இளைஞர்கள் பலர் கூடிநின்று திமிரி வரும் காளைகளை வம்பிழுப்பதும், அது மிரட்டியதும் சிதறி ஓடுவதும் என களத்தை கலகலப்பாக்கி வருகின்றனர்.

    துரை அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில் வெளியேறும் காளைகள் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாட்டு பொட்டல் மந்தையில் வந்து சேருகின்றன. அந்த மிகப்பெரிய காலியிடத்தில் முரட்டுத்தனமாக திமிரி வந்த காளைகள் அனைத்தும் கயிறுகள் மூலம் கட்டப்பட்டு மூக்கணாங்கயிறு போட்டு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான பகுதி அது.

    இங்கு காளைகள் மொத்தமாக கூடி இருப்பதை காண்பதற்காகவும் திமிரி வரும் காளைகளை வேடிக்கை பார்க்கவும் ஏராளமான இளைஞர்கள் கூடியுள்ளனர். காளைகளை சில சுற்றுகள் வட்டமாக சுற்றவைத்து நீரை மேலே ஊற்றி மூக்கணாங்கயிறு அணிவித்து கொம்பில் கயிறு சுற்றி, திமிலில் கயிறு இறுக்கி, இப்படி பலவகைகளில் காளையின் வேகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள் காளை உரிமையாளர்கள்.

    இளைஞர்கள் பலர் கூடிநின்று திமிரி வரும் காளைகளை வம்பிழுப்பதும், அது மிரட்டியதும் சிதறி ஓடுவதும் என களத்தை கலகலப்பாக்கினர். பல நேரங்களில் எல்லை மீறும் இளைஞர்களை மொத்தமாக விரட்ட காவலர்கள் ஓடி வரும்பொழுது, பயந்து ஓடுவதும், மீண்டும் அதே பகுதியில் கூடி நின்று அட்ராசிட்டி செய்வதுமாக இளைஞர்களின் விளையாட்டும் ஒரு பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது.

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன், மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி