Home /local-news /

மதுரை: மெக்கானிக்கிடம் நட்பாகி சட்டை பாக்கெட்டில் ஓடியாடி விளையாடும்  அணில்!

மதுரை: மெக்கானிக்கிடம் நட்பாகி சட்டை பாக்கெட்டில் ஓடியாடி விளையாடும்  அணில்!

மதுரை:

மதுரை: மெக்கானிக்கிடம் நட்பாகி சட்டை பாக்கெட்டில் ஓடியாடி விளையாடும்  அணில்!

மதுரை நேரு நகரைச் சேர்ந்தவர் வினோத். இவர்,  பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காகப் பணி செய்கிறார். தினமும் பணிக்கு வரும்போது அவரோடு கூடவே சட்டையில் அமர்ந்துகொண்டு வருகிற அணில் பிள்ளை, நாள் முழுவதும் அவரோடு விளையாடுகிறது.

மேலும் படிக்கவும் ...
    துரை நேரு நகரைச் சேர்ந்தவர் வினோத். இவர், பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காகப் பணி செய்கிறார். தினமும் பணிக்கு வரும்போது அவரோடு கூடவே சட்டையில் அமர்ந்துகொண்டு வருகிற அணில் பிள்ளை, நாள் முழுவதும் அவரோடு விளையாடுகிறது.

    காருக்கு அடியில் நின்று பணி செய்யும்போது அணிலும் அவரோடு சட்டையில் ஊர்ந்தபடி இருக்கிறது. பனியன், காலர், சட்டைப்பை என தவழ்ந்து ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறது. வினோத்தும் அணிலையும் ஒரு கண் வைத்துக் கொண்டே பணி செய்கிறார். இது பார்ப்பவர்களை ரசிக்கவைத்து டைம்பாஸ் பண்ண வைக்கிறது.

    இயல்பிலேயே பயம் மிகுந்த சுபாவம் கொண்ட அணில் இனம் மனிதர்களை கண்டு அஞ்சி ஓடிவிடுவது வழக்கம். ஆனால், திடீரென வந்து ஒட்டிக்கொண்ட இந்த அணில் பிள்ளை, வினோத்தை விடாமல் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. இது பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

    செய்தியாளர்: மு.முத்துக்குமரன்- மதுரை
    Published by:Alagesan R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி