Home /local-news /

வாடிவாசலுக்கு வெளியே ஜல்லிக்கட்டு.. அலங்காநல்லூரில் அமர்க்களம்!

வாடிவாசலுக்கு வெளியே ஜல்லிக்கட்டு.. அலங்காநல்லூரில் அமர்க்களம்!

மதுரை

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் தவிர்த்து ஊருக்குள் நிலவுகிற ஜல்லிக்கட்டு சூழல் குறித்து பதிவுசெய்ய அலங்காநல்லூரை வலம் வந்தோம்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் தவிர்த்து ஊருக்குள் நிலவுகிற ஜல்லிக்கட்டு சூழல் குறித்து பதிவுசெய்ய அலங்காநல்லூரை வலம் வந்தோம்.

    வழக்கமாக பல்வேறு காளைகளை வயல்வெளிகளிலும் பொட்டல்களிலும், கட்டிப்போட்டு தங்களது வாய்ப்பிற்காக காத்திருப்பது வழக்கம். டோக்கன் வாங்கிய மாடுகள் மட்டும் அனுமதிக்கும் நிலையில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விட வேண்டும் என அழைத்து வரப்படும் காளைகள் வயல்வெளிகளிலும் பிற பகுதிகளிலும் வாய்ப்புக்காக காத்திருந்தபடி கட்டி வைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இந்த முறை முழுக்கவே ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் வேறு வாய்ப்புகள் இல்லை எனக் கருதியோ என்னவோ கூடுதலான காளைகள் கிராமப் பகுதியில் வலம் வரவில்லை. சில காளைகள் முனியாண்டி சாமி கோயில் வளாகம் மற்றும் ஓடைக் கரைகளில் ஓய்வுபெற்றுக் கொண்டிருந்தன.

    ஓடைக் கரை பகுதியில் ஜல்லிக்கட்டு வாடிப் பாதைக்கு குறுக்கே செல்லும் சாலைக்காக பேரிகேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஆம்புலன்ஸ்களும், காளைகளும் செல்கின்றன. கட்டவிழ்த்து ஓடைக்குள் விழுந்த காளையை லாவகமாக கரையேற்றிய காட்சி, வெற்றி பெற்ற காளையை கெத்தாக சாலையில் அழைத்து வருவது என ஊர் முழுக்க காளை மயம்!

    எங்கிருந்து எப்போது காளை வந்து குடலைக் குறிபார்க்கும் எனத் தெரியாது. இருந்தாலும் ஒரு அசட்டு தைரியத்தில் அசால்ட்டாக வீதியெங்கும் வலம் வருகின்றனர், வீரர்களும், மக்களும். வேடிக்கை பார்த்து வெயில் சூடு தாங்காமல் மர நிழலில் ஒதுங்கினால் அங்கே ஓர் இளநீர்க்கடை, பதநீர் வண்டி கட்டாயம் இருக்கும். மாலைவரை வெயில் தெரியாமல் வேடிக்கை, விளையாட்டு என ஜாலி பண்ணலாம்.

    எப்போதும் ஊர்க்காரங்க சொல்றதுதான், கொரோனாவால சொல்லமுடியாம போச்சு.அடுத்த வருஷத்துக்கு இப்போவே சொல்லிடுறோம், எங்கூரு வாடிபார்க்க எல்லாரும் வாங்க!

    செய்தியாளர் : மு.முத்துக்குமரன். மதுரை
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி