டெஸ்க்கை தூக்கி ஆசிரியரை தாக்க வந்த மாணவர் - அதிர்ச்சி வீடியோ
டெஸ்க்கை தூக்கி ஆசிரியரை தாக்க வந்த மாணவர் - அதிர்ச்சி வீடியோ
ஆசிரியர்களை தாக்க வந்த மாணவர்கள்
TN School Viral Video | அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில் தற்போது அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி தனியார் பள்ளியில் பாடம் நடத்தும் போது நடனமாடி ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மாணவர்கள் வகுப்பறையில் நடனமாடுவது, ஆசிரியர்களை தாக்க முயல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கடந்த வியாழன் அன்று மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம் போட்டு ஆசிரியரை தாக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த பள்ளியில் 11-ம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது ஒரு மாணவர் வாசலில் நின்று நடனமாடுவதும், வேறு காட்சியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மேஜை மேல் ஏறி நின்று ஆடுவதும், ஒரு மாணவர் டெஸ்க்கை தூக்கி கொண்டு ஆசிரியரை தாக்க செல்வதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மீயூசிக் பின்னணியில் இந்த வீடியோவை யாரோ சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.
ஒரு மாணவனை ஆசிரியர் எச்சரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதுவரை அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில் தற்போது அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியடைய ஏற்படுத்திய நிலையில் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாரும், குழித்துறை கல்வி மாவட்ட கல்வி அதிகாரியும் நேற்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.