Home /local-news /

கோவையில் 137 போலீசாருக்கு பதவி உயர்வு... குஷியான காவலர்கள்!

கோவையில் 137 போலீசாருக்கு பதவி உயர்வு... குஷியான காவலர்கள்!

பதவி உயர்வு பெற்றவுடன் ஆணையருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட காவலர்கள்

பதவி உயர்வு பெற்றவுடன் ஆணையருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட காவலர்கள்

Coimbatore : கோவை மாநகர காவல்துறையில்  நீண்ட காலம் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற 'குஷி' அமர்ந்திருந்த போலீசாருக்கு பதவி உயர்வை எப்படி கையாள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார் கோவை மாநகர காவல்துறை ஆணையர். 

    கோவை மாநகர காவல்துறையில் நீண்ட காலம் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற 'குஷி' அமர்ந்திருந்த போலீசாருக்கு பதவி உயர்வை எப்படி கையாள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார் கோவை மாநகர காவல்துறை ஆணையர்.

    தமிழக காவல்துறையில் சாதாரண காவலர்களாக பணிக்கு சேர்ந்து பல ஆண்டுகாலம் உழைத்த காவலர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்ற பதவி உயர்வை வழங்கி வருகிறது தமிழக அரசு.

    அந்த வகையில் தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தலைமைக் காவலர் அந்தஸ்தில் உள்ள போலீசாருக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்ற அந்தஸ்து  வழங்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகரை பொறுத்தவரை மொத்தம் 137 போலீசார் இந்த பதவி உயர்வைப் பெற தகுதி பெற்றனர். தகுதியுடைய அனைவரும்  பதவி உயர்வை பெற்றனர். சாதாரண காவலராக நீண்ட காலமாக பணியாற்றிய தங்கள் தோள்களில் 2 'ஸ்டார்கள்' எப்போது இடம் பெறும்? என்று ஏக்கத்தோடு காத்திருந்த போலீசாருக்கு அலாதி இன்பத்தை கொடுத்திருந்தது இந்த பதவி உயர்வு.

    போலீசாரின் பதவி உயர்வுக்கான நிகழ்ச்சி இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு காவலரும் செல்பி எடுத்துக் கொண்டும், குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் கலந்து கொண்டார். அப்போது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களைப் பார்த்து அவர் பேசுகையில், “இதுவரை நீங்கள் பணிபுரிந்து வரும் காவல் நிலையங்களில் உங்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவை கடைபிடித்து பணிபுரிந்து வந்துள்ளீர்கள். தற்பொழுது உங்களுக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இனி காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு, நீங்கள் உத்தரவிடும் இடத்திற்கு வந்துள்ளீர்கள். அவ்வாறு மற்றவர்களுக்கு நீங்கள் உத்தரவிடும் போது பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது.

    காவல்துறைக்கு களங்கம் ஏற்படாத வகையிலும், சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஒரு முடிவை செயல்படுத்தும் முன் நன்கு ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Coimbatore, Police

    அடுத்த செய்தி