Home /local-news /

விளைச்சலை பெருக்கலாம்... ஆன்லைனில் விற்கலாம்... விவசாயிகளுக்கான  புதிய  இலவச செயலி கோவையில் அறிமுகம்

விளைச்சலை பெருக்கலாம்... ஆன்லைனில் விற்கலாம்... விவசாயிகளுக்கான  புதிய  இலவச செயலி கோவையில் அறிமுகம்

கோவையில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழஙகும் 'பிக்ஹாட்' செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

கோவையில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழஙகும் 'பிக்ஹாட்' செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

விவசாயிகள் தங்கள் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கவும், விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும் இலவச செயலி கோவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவையில் விவசாயிகள் தங்கள் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கவும், விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும் இலவச செயலி கோவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவை குறைப்பதிலும், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதிலும் விவசாயிகள் ஏராளமான இன்னல்கள் அடைந்து வருகின்றனர்.

    இதற்காக தமிழக அரசு உழவன் செயலியை அறிமுகப்படுத்தியும், பிரத்தியேக இணையதளங்களை தொடங்கியும் விவசாயிகளுக்கான ஆலோசனை வழங்கி வருகிறது.
    இந்த சூழலில், 'பிக்ஹாட்' என்ற செயலி கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த செயலியில் விவசாயிகள் தங்கள் மண்ணிற்கேற்ற பயிர்களை அறிந்து கொள்ளும் வசதி, சீதோஷன நிலை, பயிர் வளர்ப்பு முறைகள், மற்ற விவசாயிகளுடன் தொடர்பு, விளை பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் தளம் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த செயலியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மரபுசாரா எரிசக்தித் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் புகழேந்தி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த செயலி குறித்து அவர் நியூஸ் 18 செய்தித்தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்க வேண்டுமென்றால் உற்பத்தி செலவை குறைப்பதும், விளைச்சலை பெருக்குவதும் அவசியம். உற்பத்தி செலவை குறைக்க வேண்டும் என்றால் மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப உரங்களை குறைக்க வேண்டும் என்பதும் அவசியம்.

    தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியில் ஒவ்வொரு பகுதி மண்ணிற்கும் ஏற்ற உரம் அளவு பதியப்பட்டிருக்கும், அதோடு எந்த பயிருக்கு, எந்த கால இடைவெளியில் எவ்வளவு உரம் இட வேண்டும்? என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

    இதனால், பயிர் விளைச்சலுக்கான உற்பத்தி செலவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதோடு பயிர் பாதிக்கப்படும் சூழலில், அதனை புகைப்படமாக எடுத்து இந்த செயலியில் பதிவு செய்தால், அடுத்த சில நிமிடங்களில் தாவரவியலாளர்கள் பயிருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

    இதனால் விளைச்சலை பெருக்க முடியும். ஒரு பயிர் வளர்ச்சி காலத்தில் அதற்கு தேவையான நீர் அளவு, ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து அவ்வப்போது இந்த செயலில் நிவிவசாயிகளுக்கு கொண்டே இருக்கும்.

    விவசாயிகளுக்கு மற்றொரு பெரிய பிரச்சனையாக இருப்பது வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது தான். இதனை களையவே 'பிக் ஹாட்' செயலியில் 'கிசான் பஜார்' என்ற தளம் உள்ளது.

    விவசாயிகள் இந்த தளத்திற்கு சென்று தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கான விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்யலாம்.

    இந்த அனைத்து சேவைகளும் இலவசமாக கிடைக்கிறது. இந்த செயலி விவசாயிகளுக்கு அறிவியல் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து விஞ்ஞான முறையில் விவசாயம் செய்ய கற்றுக் கொடுப்பதும், உரிய விலை கிடைக்க உதவுவதும் இதன் சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு பேராசிரியர் புகழேந்தி கூறினார்.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி