ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது, டெக்னாலஜி அப்கிரேடசன் மட்டுமே நடக்கின்றது என்றும், டிடி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், விமான நிலைய வாயிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது என்றும், அதில் டெக்னாலஜி அப்கிரேடசன் மட்டுமே நடக்கின்றது. எந்த இடத்திலும் எதுவும் மூடப்படவில்லை எனவும் கூறிய அவர், டிடி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு குரூப் 1 அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் இன்று ஒரே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் அர்ப்பணிக்க படுகின்றது. 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளால் 1,450 கூடுதல் இடங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
Also Read : வெல்லம் உருகுதய்யா.. விடியல் ஆட்சியிலே - ட்ரெண்டாகும் ஜெயக்குமாரின் வீடியோ
இதே போல, இன்று 20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட செம்மொழி தமிழ் ஆய்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. திருக்குறளை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலைபடுத்தி வருகின்றார். இந்த நிறுவனத்தில் 100 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விவேகானந்தர் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம் என்று கூறினார்.
Must Read : சிவகங்கையில் சேவல் சண்டைக்கு தயாராகும் சேவல்கள்..!
அப்போது, முதலமைச்சரின் தமிழ்புத்தாண்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு சித்திரை ஓன்றுதான் என்று பதிலளித்தார். 11 மருத்துவகல்லூரிகள் மட்டுமின்றி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதற்கென ஒரு காலவரம்பு இருக்கின்றது. தமிழகத்தற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரும் .கட்டாயம் தமிழக மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள் என்று எல்.முருகன் தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.