கோவை: வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளிலும், ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளிலும் பக்தர்கள் இந்த மலையை ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
நடப்பு ஆண்டில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி. பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் தினமும் மலையேறி வந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் இரவு பகலாக வெள்ளியங்கிரி மலைஏற்றத்தை தொடர்ந்திருந்த நிலையில், திடீரென மலையேற்றத்திற்கு தடை விதித்தது வனத்துறை.
கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக இருக்கும் என்றும், எனவே மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்தது.
இது வெள்ளியங்கிரி பயணம் செய்யும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து இந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்த சூழலில், வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை திரும்பப்பெற்றுள்ளத. மலையேற்றத்திற்கு எந்தவித தடையும் இல்லை என்று வனத்துறை அறிவித்ததை தொடர்ந்து பக்தர்கள் மலை ஏற தொடங்கி உள்ளனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.