ஹோம் /Local News /

கோவையில் இன்று  (மே 9) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.! 

கோவையில் இன்று  (மே 9) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.! 

கோவையில் இன்று  (மே 9) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் 

கோவையில் இன்று  (மே 9) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் 

கோவையில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவையும் பெங்களூர் போல் மாற வேண்டும் - நிதி அமைச்சர்

பெங்களூர், ஹைதராபாத் போல் கோவையும் ஸ்டார்-அப் நகரமாக மாறும் நம்பிக்கை தனக்கு உள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கோவையில் சிறந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவில் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்தார்.

கைதிகளுக்கு இடையே மோதல்

கோவை மத்திய சிறையில் கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தினார். இதனை அறிந்த மன்சூர் என்ற கைதி இதுகுறித்து ஜெயிலரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக கைதிகள் மோதிக்கொண்டனர். இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீக்காயம் பட்ட சிறுவன் பரிதாப பலி

கோவை ராமநாதபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கவுதம் அங்கிருந்த கார் அருகே நின்ற போது, கார் தீப்பற்றியது. இந்த விபத்தில் சிறுவன் கவுதமின் உடலிலும் தீ பற்றியது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

1,100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

பெரியநாயக்கன்பாளையம் தாமு நகரில் ரஜினி என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் 1100 கிலோ ரேசன் அரிசியை இன்று பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். அதிகாரிகள் வருவதை தெரிந்து கொண்ட ரஜினி தலைமறைவாகினார். தொடர்ந்து பதுக்கலில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சரின் வீட்டு வாசலில் வழிந்தோடும் நீர்

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாத நிலையில், அங்கிருந்த குடிநீர் குழாயும் உடைந்து வீதி முழுவதும் நீர் ஓடியது. அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களை வைரலாக்கிய பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் இதனை சரி செய்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கம் போராட்டம்

கோவை பவர் ஹவுஸ் பகுதியில் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழுவினர், பழைய ஓய்வூதியம், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம் பெருவோர்க்கு நிரந்தர காலமுறை ஊதியம், நியாயவிலைக்கடை மற்றும் டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

First published:

Tags: Coimbatore