Home /local-news /

கோவையில் இன்றைய (மே 06) முக்கிய நிகழ்வுகள்

கோவையில் இன்றைய (மே 06) முக்கிய நிகழ்வுகள்

கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள்

கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள்

Coimbatore Today Top News | கோவையில் இன்று (மே 06) நடைபெற்ற நிகழ்வுகள்

    கோவை: கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

    53 கிலோ ஷவர்மா மூலப்பொருட்களை பறிமுதல்:

    கோவையில் ஷவர்மா விற்பனையகங்களில் திடீர் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்புத்துறையினர் 53 கிலோ அளவிலான கெட்டுப்போன ஷவர்மா மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    'ரன் ஃபார் காயர்' மாரத்தான்

    கயிறு வாரியம் சார்பில் 'ரன் ஃபார் காயர்' என்ற மாரத்தான் ஓட்ட போட்டி கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. தென்னை நார் மற்றும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

    இலவச முழு உடல் பரிசோதனை

    கோவையில் முன்களப் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார். முதல் நாளில் சுமார் 50 பத்திரிகையாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அரசு பேருந்து ஓட்டுநர் கைது

    வால்பாறையில் மனைவியுடன் பேசிய எஸ்டேட் காவலாளியை தனது தந்தையுடன் சேர்ந்து கட்டையால் தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது தந்தையை தேடி வருகின்றனர்.

    வாகனம் மோதி முதியவர் பலி:

    பெரிய நாயக்கன்பாளையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பழனிசாமி என்ற 70 வயது முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்:-

    கோவை மாவட்டத்தில் இன்று 149 மையங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் 41 ஆயிரத்து 811 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எளிமையாக இருந்ததாக கூறியுள்ளனர்.

    நகை பறிக்க முயன்ற பெயிண்டர் கைது

    தொண்டாமுத்தூரில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற தனலட்சுமி என்ற மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி செய்த பெயிண்டர் பிரபாகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    கால்பந்து போட்டி

    கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி எஸ்.என்.எஸ் கல்லூரியில் நடைபெற்று வந்தது. இதில் சி.எஸ்.ஐ பிஷப் அப்பாசாமி கல்லூரி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இறந்தவர் யார்

    சிங்காநல்லூரை அடுத்த ராமானுஜம் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். அவர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வாகன விபத்து

    கோவை, சேரன்மாநகர் பஸ் ஸ்டாப் அருகே மாநகராட்சி கழிவுநீர் வாகனம் மற்றும் தனியார் டேங்கர் லாரி மோதி விபத்து. இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் இல்லாத காரணத்தால் பெரிய அசம்பாவிதம் தவிற்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர் ஒத்திகை:

    சூலூர் தீயணைப்புத்துறையினர் இன்று அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீயணைப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி