Home /local-news /

கோவையில் முன் களப்பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம்.!

கோவையில் முன் களப்பணியாளர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை முகாம்.!

பத்திரிகையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

பத்திரிகையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

கோவையில் தனியார் மருத்துவமனை மற்றும் பத்திரிகையாளர் மன்றம் சார்பில்  நடைபெற்ற முன்களப் பணியாளர்களுக்கான இலவச முழு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன்  இன்று துவக்கி வைத்தார்.

    கோவை: கோவையில் தனியார் மருத்துவமனை மற்றும் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடைபெற்ற முன்களப் பணியாளர்களுக்கான இலவச முழு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

    கொரோனா அச்சுறுத்தல் இருந்த காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் களப்பணியாற்றினர். இவர்களுடன் களத்தில் இருந்து கொரோனா குறித்த தகவல்களையும், அரசின் அறிவிப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் பத்திரிகையாளர்கள்.

    எனவே பத்திரிகையாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்தது அரசு. இந்த சூழலில், கோவையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு ஏ.ஜி.எஸ் மருத்துவமனை மற்றும் கோவை பத்திரிகையாளர் மன்றம் இணைந்து முழு உடல் பரிசோதனை நடத்த முன்வந்தன.

    இந்த முகாமை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஏ.ஜி.எஸ் மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார். இதில் 50ககும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறித்த பரிசோதனைகள் மற்றும் இ.சி.ஜி மேற்கொள்ளப்பட்டன.

    இதுகுறித்து மருத்துவ மையத்தின் இயக்குனர் ஆதித்யன் குகன் கூறுகையில், \"தொற்று காலத்திலும் கடினமான பணியில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களாக திகழும் பத்திரிக்கையாளர்களுக்கு , உடல் நல பாதுகாப்பு அளிக்க இது சரியான தருணம். அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.\" என்றார்.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி