கோவையில் அம்மன் சிலை ஒன்று கண் திறந்ததாக கூறி பரவசமடைந்த மக்கள் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கோவை காமராஜபுரத்தில் அருள்மிகு தேவிஸ்ரீ பூ மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ள சூழலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலில் கணபதி ஹோமம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அப்பகுதி மக்கள் அம்மன் சிலைக்கு பூஜை செய்ய சென்றுள்ளனர். அப்போது அந்த அம்மன் சிலை திடீரென கண் திறக்கப்பட்டு காட்சியளித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மளமளவென பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் பலரும் அம்மன் கண் திறந்ததை பர்க்க சென்று பரவசமடைந்தனர்.
மேலும், அம்மன் சிலைக்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு நடத்தி வழிபட்டனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.