Home /local-news /

ஜெர்மென் கொஞ்சம் பரவாயில்லை..! கோவையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

ஜெர்மென் கொஞ்சம் பரவாயில்லை..! கோவையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்

12 பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்

12 பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள்

தமிழ் தேர்வு மிகவும் சுலபமாக இருந்ததாகவும், ஜெர்மென் மொழித்தேர்வு கடினமின்றி இருந்ததாகவும் கோவையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

    கோவை: தமிழ் தேர்வு மிகவும் சுலபமாக இருந்ததாகவும், ஜெர்மென் மொழித்தேர்வு கடினமின்றி இருந்ததாகவும் கோவையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

    தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. வரும் 28-ந் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் இந்த பொதுத்தேர்வை 35 ஆயிரத்து 33 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

    இதற்காக 119 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளதுமேலும், 2 ஆயிரத்து 47 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவர்களுக்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    முதல் நாள் மொழிப்பாட தேர்வு நடைபெற்றது. தமிழ், பிரெஞ்சு மற்றும் ஜெர்மென் மொழியில் மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1.15 வரை நடைபெற்றது.இதில் தமிழ் மொழி மற்றும் பிரெஞ்சு மொழி தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தமிழ் தேர்வு எழுதிய மாணவர் மகேஸ்வரன் கூறுகையில், "தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து எந்த கேள்விகளும் கேட்கப்படவில்லை. ஆனால், சில கேள்விகள் பாடப்புத்தகத்தில் இருந்ததை போல் கேட்கவில்லை. உதாரணமாக நகரம் \"பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம் தருக\" என்ற கேள்வி, வினாத்தாளில் "சூரிய ஒளி பட்டவுடன் நகரம் எவ்வாறு மாறியதாக அய்யப்பமாதவன் குறிப்பிடுகிறார்?" என்று கேட்கப்பட்டிருந்தது. இதனால் சற்று குழப்பமடைந்தோம்." என்றார்.

    ஜெர்மன் மொழித்தேர்வு எழுதிய மாணவி பீனா கூறுகையில், "கொரோன காலத்தில் ஆன்லைன் கல்வி கற்றோம் என்பதற்காக வினாக்கள் மிகவும் எளிமையாக கேட்கப்படவில்லை. ஆனால், தேர்வு அந்த அளவுக்கு கடினமும் இல்லை. வழக்கமான வக்குப்புகள் நடத்தப்பட்டிருந்தால் தேர்வு எங்களுக்கு எளிமையாக இருந்திருக்கும்." என்றார்.

    இதேபோல் பிரெஞ்சு மொழித்தேர்வு எழுதிய மாணவர்களும் தேர்வு எளிமையாக இருந்ததாக குறிப்பிட்டனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Coimbatore, Public exams

    அடுத்த செய்தி