கோவை மாவட்டத்தில் 41 ஆயிரத்து 811 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது. இந்த நிலையில், நாளை 10 வகுப்புக்கான பொதுத்தேர்வு துவங்க உள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 10ம் வகுப்புத் தேர்வை 41 ஆயிரத்து 811 மாணவர்கள் எழுத உள்ளனர்.
இதற்காக 141 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 2 ஆயிரத்து 917 தனித்தேர்வர்களும் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 6 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு பணியில் 3 ஆயிரத்து 800 பேர் ஈடுபடுகின்றனர். தேர்வு எழுத வரும் மாணவர்கள் வாட்ச், பெல்ட்டு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை தமிழ் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் நகரத்திலிருந்து(கோயம்புத்தூர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.