முகப்பு /Local News /

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுபாடு இல்லை- நிர்வாகம் தகவல்

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுபாடு இல்லை- நிர்வாகம் தகவல்

X
தொழில்துறை

தொழில்துறை சிலிண்டர்களின் பயன்பாடு : கொரோனா இரண்டாம் அலை கடந்த 2 மாதங்களாக மிக தீவிரமாக உள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சமாளிக்க அதிக அளவு தொழில்துறை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் பயன்படுத்தப்பட்டு பற்றாக்குறையை சரி செய்ய பயன்படுத்தப்பட்டது. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தொழில்துறை சிலிண்டர்கள் மருத்துவ தரத்திற்கு மேம்படுத்தப்பட்டாலும், நோயாளிகள் பயன்படுத்தும் அனைத்து மருத்துவ சிலிண்டர் அல்லாதவைகள் தரம் உயர்த்தப்படுவது என்பது சாத்தியம் இல்லை.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :

கொரோனா வேகம் எடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை மோசமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவில் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பதாகவும், கூடுதலாக கொரோனா படுக்கை அறைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மருத்துவக் கல்லூரி இயக்குநர் மருத்துவர் திருஞானசம்பந்த மணி கூறியதாவது, ‘மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. மேலும், அரசு மருத்துவமனை கிடங்கில் அதிகமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையின்றி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த அறைகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு முகாமில் உள்ள நோயாளிகளுக்கு சத்துள்ள உணவுகள் அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Virudhunagar