வாக்குகளை விற்காதீர் - விழுப்புரத்தில் மகளிர் சுய உதவிக்குழு விழிப்புணர்வு பேரணி

வாக்குகளை விற்காதீர் - விழுப்புரத்தில் மகளிர் சுய உதவிக்குழு விழிப்புணர்வு பேரணி

மகளிர் சுய உதவிக் குழு பேரணி

விழுப்புரத்தில் வாக்குப் பதிவின் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக் குழு பிரச்சாரம் செய்தது.

  • Share this:
    விழுப்புரம் மாவட்டம் கிழக்கு, பாண்டி சாலையில்  மகளிர் சுய உதவிக்குழுவினர் தேர்தல் குறித்து விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். அக்குழுவினரோடு பொதுமக்களும் கலந்துகொண்டனர். அப்போது, ஓட்டுகளை வீணாக்காதீர்கள், ஓட்டுகளை விற்காதீர்கள் என்று முதலில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். பின்பு, ஒலிப்பெருக்கியின் மூலம் பிரச்சாரம் செய்தபடியே, தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.  அப்பகுதி மக்களுக்கு வாக்கை வீணாக்காதீர்;  வாக்கை விற்காதீர் என்றுதுண்டுப்பிரசுரமும் வழங்கினார்கள்.
    Published by:Karthick S
    First published: