Home /News /local-18 /

விழுப்புரம் : காலி மனை இடங்களில் தேங்கிய மழைநீர் - குளம் போல் மாறியது 

விழுப்புரம் : காலி மனை இடங்களில் தேங்கிய மழைநீர் - குளம் போல் மாறியது 

Villupuram: Rainwater accumulated in vacant lots-turned into a pond

Villupuram: Rainwater accumulated in vacant lots-turned into a pond

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீரில், குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. மழை ஓய்ந்தாலும் வடியாத வெள்ள நீரால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

  • Last Updated :
    விழுப்புரம் : காலி மனை இடங்களில் தேங்கிய மழைநீர் -குளம் போல் மாறியது

    விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீரில், குடியிருப்புப் பகுதிகள் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. மழை ஓய்ந்தாலும் வடியாத வெள்ள நீரால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

    இந்நிலையில், விழுப்புரம் நகரப் பகுதியான கணேஷ் நகர், லட்சுமி, திரு நகர், பொன் அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீரோடு கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அதுபோல, விழுப்புரத்தில் இரு நாட்களாக மழை விட்ட நிலையில், தற்போது மறுபடியும் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், விழுப்புர நகர மக்கள் கடும் அவதி உள்ளனர். தங்களுடைய இயல்புநிலை பாதிப்படைந்துள்ளது என கவலை தெரிவிக்கின்றனர்.

    அதுபோல ,விழுப்புரம் 39வது வார்டில் வள்ளலார் முதல் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் காலி மனைகளில் தேங்கியிருக்கும் மழை நீர், ஏங்கியபடி தற்போது குளமாக மாறி வந்துள்ளது.

    அதில் அல்லிப் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளது. மழை நீராக தேங்கிய தண்ணீர் தற்போது குளமாக மாறி உள்ளது. அந்த தேங்கிய மழைநீரில் பாம்பு போன்ற விஷமுள்ள ஊர்வனங்கள் வந்து செல்வதால் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்த உள்ளார்கள்.

    இப்பகுதியில் உள்ளவர்கள் இந்த நீரை அப்புறப்படுத்தும்படி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி