• HOME
  • »
  • NEWS
  • »
  • local-18
  • »
  • வீட்டு வாசலில் தீப்பற்றி உயிரிழந்த பெண் - கணவர் வீட்டார் கொன்றதாக புகார்!

வீட்டு வாசலில் தீப்பற்றி உயிரிழந்த பெண் - கணவர் வீட்டார் கொன்றதாக புகார்!

Youtube Video

ஏப்ரல் 30ம் தேதி காலை 10 மணியளவில், பரமேஸ்வரி வீட்டில் இருந்து எரிந்த நிலையில் வெளியே ஓடி வந்து விழுந்துள்ளார். சிறிது நேரம் உயிருக்குப் போராடிய பரமேஸ்வரி, வீட்டு வாசலிலேயே உயிரிழந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    விழுப்புரம் மாவட்டத்தில், வரதட்சணைக் கொடுமை காரணமாக தனது மகளை கணவனும் அவரது குடும்பத்தினரும் தீ வைத்து எரித்துக் கொலை செய்து விட்டதாக பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 25 வயதான வெங்கடேசன் - 21 வயதான பரமேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது; 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி காலை 10 மணியளவில், பரமேஸ்வரி வீட்டில் இருந்து எரிந்த நிலையில் வெளியே ஓடி வந்து விழுந்துள்ளார். சிறிது நேரம் உயிருக்குப் போராடிய பரமேஸ்வரி, வீட்டு வாசலிலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து வந்த பரமேஸ்வரியின் தாய் செல்வி, தனது மகளை கணவன் வீட்டார் தீ வைத்து எரித்துக் கொன்றதாக செஞ்சி காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதில், திருமணமாகி சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு தனது மகளை கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

    Also read... Corona Restrictions | இரவு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கில் அனுமதிப்பட்டுள்ள சேவைகள் என்ன?

    கணவன் வெங்கடேசன், அவரது தாய் ராணி, தம்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனது மகளை உடலளவிலும் மனதளவிலும் பல சித்ரவதைகளுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்தத் தகராறில் மகள் தனது வீட்டிற்கு பலமுறை வந்துள்ளதாகவும் தான் சமாதானம் சொல்லி அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளார். கணவன் வெங்கடேசன் தினசரி குடித்து விட்டு மனைவியை அடிப்பதும் உதைப்பதுமாக கொடுமைகள் செய்ததாகவும் அதன் உச்சகட்டமாக மகளை தீ வைத்து எரித்துக் கொன்று விட்டதாகவும் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில், செஞ்சி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: