Home /News /local-18 /

விழுப்புரம் : மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் ரத்து - பக்தர்கள் ஏமாற்றம் 

விழுப்புரம் : மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் ரத்து - பக்தர்கள் ஏமாற்றம் 

Cancellation of spring festival in Melmalayanur: Devotees disappointed 

Cancellation of spring festival in Melmalayanur: Devotees disappointed 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வரும் 4ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் டிசம்பர் 4 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், ஊஞ்சல் உற்சவம் போன்றவற்றை மிகுந்த மகிழ்ச்சியுடன் பொதுமக்களும் பக்தர்களும் கண்டுகளித்து செல்வார்கள்.

    ஆனால், கொரோனோ ஆரம்பித்த நாளிலிருந்து எந்த மாதமும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறவில்லை. இதனால், ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஆனால், இந்த மாதம் கண்டிப்பாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் இருந்து வந்தனர்.

    இந்நிலையில், தற்போது, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, வரும் 4 ஆம் தேதி அமாவாசையன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகின்றது.

    ஆனால், பக்தர்களுக்கு தரிசனம் மட்டும் கிடைக்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் தமிழக அரசு போக்குவரத்துத்துறை சார்பில், சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த தகவல், திருக்கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது என, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி