திருச்சியில் ரூ.9 கோடி ரொக்கம் பறிமுதல்... தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ள நிலையில் பரபரப்பு

கணக்கில் வராத ரொக்கப் பணம் வேட்பாளர் யாருக்கேனும் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதா? வரி ஏய்ப்பு செய்த பணமா?  என்கிற கோணத்திலும் வருமான வரித்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
திருச்சி -புதுக்கோட்டை சாலை மொராய்ஸ் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் உள்ள மொராய் சிட்டி , கே.கே.நகர் மகாலட்சுமி நகரில் உள்ள செப்கோ ப்ராப்பர்டௌடீஸ் அதிபர் லொரைன் மொராய்  வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையின்  10-க்கும் மேற்பட்டோரைக் கொண்டு அதிகாரிகள் நேற்று காலை சோதனையைத் தொடங்கினர்.

திருச்சி, மதுரை மண்டலத்தில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் குழு  2வது நாளாக சோதனை நடத்தினர் .விடிய விடிய சோதனை நடைபெற்றது.  சோதனையில் கணக்கில் வராத ₹ 9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் வேட்பாளர் யாருக்கேனும் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதா? வரி ஏய்ப்பு செய்த பணமா?  என்கிற கோணத்திலும் வருமான வரித்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பயணிக்கும் ஹெலிகாப்டர்  இறங்கு தளம் மொராய் சிட்டி வளாகத்தில் உள்ளது. இதில் தான் கமல் இறங்கி பிரச்சாரத்திற்கு சென்றார்.
மேலும், அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், திருவெறும்பூர் வேட்பாளர் ப.குமார், மக்கள் நீதி மய்யம் திருச்சி கிழக்கு வேட்பாளர் வீரசக்தி ஆகியோரது வீடுகளும்
நாம் தமிழர் திருச்சி மேற்கு வேட்பாளர் வினோத் உறவினர் வீடும்  மொராய் சிட்டி குடியிருப்பில்  உள்ளன.

இந்நிலையில், ரொக்கப் பணம் கோடிக்கணக்கில் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரியல் எஸ்டேட்டிற்காக விவசாய நிலைத்தைக் கேட்டு,  மிரட்டியதாக  செப்கோ ப்ராப்பர்ட்டீஸ் அதிபர் லொரைன் மொராய் மீது, பொன்மலை காவல் நிலையத்தில் வழக்கும் உள்ளது.
Published by:Vijay R
First published: