தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி, கட்சிக்குள்ளயே வரக் கூடாது என்றவர் பழனிச்சாமி. ஜெயலலிதா, சசிகலாவிற்கு துரோகம் செய்தவர். நேரத்திற்கு ஒரு நிறம் மாறும் பச்சோந்தி பழனிச்சாமி என்றும் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து மகளிரணிச் செயலாளர் கனிமொழி பொன்மலைப்பட்டி, பொன்மலை, குண்டூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், இந்த தேர்தல் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. தமிழ்நாட்டை மீட்பதற்கான தேர்தல். டெல்லியில் அடகு வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு உரிமைகளை மீட்பதற்கான தேர்தல்.
வேளாண் சட்டங்கள், சிஏஏ உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை திமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதிமுக ஆதரித்தது. இப்போது தேர்தலுக்காக இவற்றை நீக்க வலியுறுத்துவோம் என்கிறார்கள். நேரத்திற்கு நேரம் நிறம் மாறும் பச்சோந்தியாக முதலமைச்சர் பழனிச்சாமி உள்ளார்.
தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி, கட்சிக்குள்ளயே வரக் கூடாது என்றவர் பழனிச்சாமி. அமைச்சராக்கிய ஜெயலலிதாவிற்கும், முதலமைச்சராக்கிய சசிகலாவிற்கும் துரோகம் செய்தவர் பழனிச்சாமி என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அராஜக ஆட்சி நடக்கிறது. ஊழலில் மட்டும் தமிழ்நாட்டை முன்னேற்றி வைத்துள்ளனர். அனைத்து துறைகளிலும் ஊழல். கொரோனா மாஸ்க், துடைப்பம், எல்இடி பல்ப் வாங்கியதில் ஊழல்.குறிப்பாக ₹1300 வாங்க வேண்டிய ₹ 6500க்கு வாங்கியுள்ளனர் என்றார்.
பத்தாண்டுகளாக வழங்கப்படாத முதியோர் உதவித் தொகை வழங்கப்படவில்லை.(பெண்கள் வழங்கப்படவில்லை என்று புகார்) இந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டுதான். வெற்றி நடை போடும் தமிழகம் னு விளம்பரம் மட்டும் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலுக்கு தமிழில் இல்லாமல் இந்தியில் வேட்பாளர்கள் பட்டியலைத் வெளியிட்டுள்ளது பா.ஜ.க. அந்தளவிற்கு இந்தியைத் திணிக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்காமல், அடிமைத்தனமாக அதிமுக அக்கட்சியோடு கூட்டணியில் உள்ளது என்றார்.