திருச்சியில் தடுப்பூசி திருவிழா : நேற்று வரை 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

திருச்சியில் தடுப்பூசி திருவிழா : நேற்று வரை 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பூசி

திருச்சியில் நேற்றுவரை 1.60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

  • Share this:
பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும்  தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.
அந்த வகையில் திருச்சியில்  கடந்த 14ஆம் தேதி முதல் இன்று வரை அதாவது மூன்று தினங்களுக்கு தடுப்பூசி திருவிழா நடைபெற்றது .

அந்த வகையில் திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 86 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் 44 தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் அதிக நபர்களுடன்  பணிபுரியும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைய தேதி வரை திருச்சி மாவட்டத்தில் 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

செய்தியாளர் : கதிரவன்


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: