Home /News /local-18 /

'தேனி பாலைவனமாக மாறும்' லோயர்கேம்ப் - மதுரை சிறப்பு குடிநீர் திட்டத்தை எதிர்த்து விவசாய சங்க நிர்வாகிகள் தர்ணா..

'தேனி பாலைவனமாக மாறும்' லோயர்கேம்ப் - மதுரை சிறப்பு குடிநீர் திட்டத்தை எதிர்த்து விவசாய சங்க நிர்வாகிகள் தர்ணா..

லோயர்கேம்ப்- மதுரை சிறப்பு குடிநீர் திட்டம் தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் எனவும், மாற்று திட்டமாக வைகை அணையை தூர்வாரி மதுரை மாவட்ட மக்களுக்கு தண்ணீரை கொண்டு செல்ல வலியுறுத்தியும், கம்பம் சட்ட மன்ற அலுவலகம் முன்பு முல்லை சாரல் விவசாய சங்க நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லோயர்கேம்ப்- மதுரை சிறப்பு குடிநீர் திட்டம் தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் எனவும், மாற்று திட்டமாக வைகை அணையை தூர்வாரி மதுரை மாவட்ட மக்களுக்கு தண்ணீரை கொண்டு செல்ல வலியுறுத்தியும், கம்பம் சட்ட மன்ற அலுவலகம் முன்பு முல்லை சாரல் விவசாய சங்க நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லோயர்கேம்ப்- மதுரை சிறப்பு குடிநீர் திட்டம் தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் எனவும், மாற்று திட்டமாக வைகை அணையை தூர்வாரி மதுரை மாவட்ட மக்களுக்கு தண்ணீரை கொண்டு செல்ல வலியுறுத்தியும், கம்பம் சட்ட மன்ற அலுவலகம் முன்பு முல்லை சாரல் விவசாய சங்க நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
    "தேனி பாலைவனமாக மாறும்" - லோயர்கேம்ப்- மதுரை சிறப்பு குடிநீர் திட்டத்தை எதிர்த்து விவசாய சங்க நிர்வாகிகள் தர்ணா...


    லோயர்கேம்ப்- மதுரை சிறப்பு குடிநீர் திட்டம் தேனி மாவட்டத்தை பாலைவனமாக மாற்றும் எனவும், மாற்று திட்டமாக வைகை அணையை தூர்வாரி மதுரை மாவட்ட மக்களுக்கு தண்ணீரை கொண்டு செல்ல வலியுறுத்தியும், கம்பம் சட்ட மன்ற அலுவலகம் முன்பு முல்லை சாரல் விவசாய சங்க நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறப்பு கூட்டு குடிநீர் திட்டம் :-

    தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு நேரடியாக குழாய் மூலம் முல்லைப் பெரியாற்று தண்ணீரை கொண்டு செல்லும் திட்டமான, லோயர்கேம்ப்- மதுரை சிறப்பு குடிநீர் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது . இத்திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இத் திட்டமானது சுமார் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இத்திட்டத்தை தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களும், விவசாயிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் . இத்திட்டத்தை எதிர்த்து தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

    இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் எனவும், தேனி மாவட்டம் வறண்ட நிலமாக மாறிவிடும் எனவும் இப் பகுதி விவசாயிகளும் விவசாய சங்க நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.


    திட்டத்திற்கு எதிர்ப்பு :-


    மேலும், இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பு விவசாயிகளை அழைத்து முறையாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும் எனவும், இத்திட்டத்திற்கு பிற மாற்றுத்திட்டங்களான உத்தப்பநாயக்கனூரில் புதிய அணைகட்டும் திட்டத்தின் மூலமாக மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம் எனவும் , வைகை அணையை தூர்வார அதில் இருந்து நேரடியாக மதுரை மாவட்ட மக்களுக்கு தண்ணீரை எடுத்துச் செல்லும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ஆனாலும், தேனி மாவட்டத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு குழாய் வழியாக தண்ணீரை எடுத்து செல்லும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது மதுரை மாவட்ட அதிகாரிகளும் இத்திட்டத்தை ரகசியமாக ஆய்வு செய்து வருவது வாடிக்கையாக இருந்தது.

    தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கங்களின் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


    அந்த வகையில் இன்று முல்லை சாரல் விவசாய சங்கம் நிர்வாகிகள், கம்பம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் , தங்களது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளிக்கவும் முற்பட்டனர்.

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகளை போலீசார் கைது செய்ய முற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


    பின்னர் சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்து, இத் திட்டத்தை செயல்படுத்தாமல் மாற்று திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

    மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் , விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வருக்கு இப்பிரச்சினை தொடர்பாக கவனத்தில் கொண்டு செல்லப்படும் எனவும் உறுதி அளித்ததையடுத்து விவசாய சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர்


    பாலைவனமாகும் தேனி :-

    இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்பில் பெரிய தடுப்பணை ஒன்றை முல்லை பெரியாற்றின் குறுக்கே கட்டி அங்கிருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் தேவைக்காக நீரை கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட திட்டம், இந்த அம்ரூட்(AMRUT) என்ற
    லோயர்கேம்ப்-மதுரை சிறப்பு குடிநீர் திட்டமாகும். தற்போது இந்த திட்டத்திற்கு புதிய மதிப்பீடு செய்து, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது .



    இத்திட்டத்திற்கு தடுப்பணையை கட்ட உள்ள இடத்தின் கீழ்புறம் தான் கம்பம் குடிநீர் திட்டத்திற்கான பம்பிங் ஹவுஸ் உள்ளது. அதிலிருந்து ஏற்கனவே 6 சிறப்பு குடிநீர் திட்டங்களுக்காக வேண்டி, குழாய்கள் மூலம் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை,தேவாரம்,
    போடி மற்றும் சின்னமனூர்
    பகுதிகளுக்கு தனித்தனியே குழாய்கள் மூலம் தினமும் குடிநீர் சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில், தற்போது இந்த பம்பிங் ஸ்டேசன் பகுதிக்கு, மேலே ஒரு புதிய தடுப்பணையை மதுரை சிறப்பு குடிநீர் திட்டத்திற்காக கட்டப்படும் பொழுது, கோடை காலங்களில் முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து குடிநீருக்கு திறந்து விடப்படும் மிக குறைந்த அளவான 100 க.அ தண்ணீரில் புதிதாக கட்டப்படவுள்ள தடுப்பணையிலிருந்து மட்டுமே மதுரை நகருக்கு சுமார் 55 க.அ. (வினாடிக்கு) அதிகமான நீரை நேரடியாக கொண்டு சென்று விட்டால், அதற்கும் கீழே உள்ள கம்பம் பம்பிங் ஸ்டேசனுக்கு மிகக்குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கும்.

    அதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி,அனைத்து நகராட்சி,பேரூராட்சி,
    கிராம பஞ்சாயத்துகள்,
    தேனி மற்றும் வைகை அணை வரையில் முல்லை பெரியாற்றில் இருந்து செயல்படுத்தி கொண்டிருக்கும் அனைத்து உறை கிணறுகளும் தண்ணீர் இல்லாமல் மிகப்பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட கூடும் ,மேலும் ஏற்கனவே தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் சிவப்பு அபாய எச்சரிக்கையில் உள்ளது. (900அடிக்கும் கீழ்) அது மேலும் குறைத்து ஆழமாக சென்று விடும்...

    ஆற்றின் வழியே நீர் செல்ல வில்லை என்றால், ஆற்றின் கரைபகுதியில் உள்ள கிணறுகள், போர்வெல் உள்ளிட்டவை வற்றி வறண்டுவிடும்,
    விவசாய நிலங்களில் நீரின்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்ய இயலாது‌, தரிசு நிலங்களாக மாறிவிடும். ஆடு மாடு,விலங்குகளுக்கும் தண்ணீர் கிடைக்காது, வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் நிலம், குளங்கள் அனைத்தும் வறண்டு விடும், புவிவெப்பமயமாதல் ஏற்பட்டு அதனால் மழைபொழிவு குறைத்து வறட்சி ஏற்படும்.

    அதனால் தான் இத்திட்டத்தை தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும்,
    விவசாயிகளும் செயல்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


    மாற்று திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை :-


    தேனி மாவட்ட மக்கள்,
    மதுரை மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல,பழைய மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்து வந்ததுதான் நமது தேனிமாவட்டம் என்பது உண்மையை நன்கு உணர்வோம். மதுரை மாநகருக்கு தண்ணீரை வழங்க கூடாது என எப்போதும் கூறவில்லை.
    இத்திட்டமும்,திட்டம் செயல் படுத்தும் விதமும்தான் இயற்கை விதிகளுக்கு புறம்பாக உள்ளதாலும், இதனை மாற்று திட்டங்களின் மூலம் செயல்படுத்த வலியுறுகின்றோம்.

    தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீர் வாழ்வாதாரம் முல்லை பெரியாறு அணையாகும்.
    மதுரைக்கு தண்ணீரை குழாய்கள் மூலமாக கொண்டு செல்ல வேண்டாம் என்றும், நீரை ஆற்றின் வழியிலேயே கொண்டு சென்று, வைகை அணை தூர்வாறி,நீர் கொள்ளளவு அதிகரிக்க செய்து, வைகை அணையிலிருந்து மதுரைக்கு தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்" என்றனர்


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி