தேனி : தேர்தல் முடிவு வெளியீட்டால் தொலைக்காட்சி முன்பு முகாமிட்ட மக்கள்

தேனி : தேர்தல் முடிவு வெளியீட்டால் தொலைக்காட்சி முன்பு முகாமிட்ட மக்கள்

தேனி ஊரடங்கு

தேர்தல் வெளியான கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேனி மக்கள் தொலைக்காட்சி முன்பு கூடினர்.

 • Share this:
  அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான முடிவு வெளியிட்டதாலும், முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையினாலும் தேனி மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  கொரோனா தொற்று

  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 20,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரங்கு அமலில் உள்ளது. மேலும், ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  முழு ஊரடங்கு

  தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ளிட்டவை திறக்கப்படவில்லை. எப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையிலேயே மீன் மார்க்கெட்டுகளிலும், இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதும். நேற்று இந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் மீன் மார்க்கெட் பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  ஞாயிற்றுக்கிழமைகளில் தேனி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான இடங்களில் வாரச்சந்தைகள் நடைபெறுவது உண்டு. ஆடு, நாட்டுக்கோழி வியாபாரம் சந்தைகளில் களை கட்டும். கூடலூர் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாலையோரமாக சேவல், கோழிகளை பலர் விற்பனைக்காக வைத்திருப்பார்கள். நாட்டுக்கோழி முட்டை வியாபாரமும் அதிகமாக நடைபெறும். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக சந்தை நடைபெறவில்லை.

  தேர்தல் முடிவு - மக்கள் ஆதரவு
  :-

  தேனி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டும், மக்கள் தேவையின்றி வெளியே செல்லாமலும், முழு ஊரடங்கிற்கு ஆதரவு அளித்தனர். இருப்பினும் தேர்தல் முடிவு குறித்த அறிவிப்பு தொலைக்காட்சிகளில் நேற்று முழுவதும் ஒளிப்பரப்பப்பட்டதால் மக்கள் பெரும்பாலானோர் தொலைக்காட்சி முன்பே முகாமிட்டனர்.
  அதே சமயம், முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் இயங்கின. மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவை எப்போதும் போல செயல்பட்டன.
  Published by:Karthick S
  First published: