தங்க தமிழ்செல்வனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் - ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்

ஓ.பி.எஸ்-ஸை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஓ.பி.ரவீந்திரநாத்

ஜெயலலிதா சிறை செல்வதற்கு காரணமான திமுக கட்சியில் சேர்ந்து கொண்டு தேர்தலில் போட்டியிடும் தங்கதமிழ்செல்வனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஓ.பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார்.

 • Share this:
  ஜெயலலிதா சிறை செல்வதற்கு காரணமான திமுக கட்சியில் சேர்ந்து கொண்டு தேர்தலில் போட்டியிடும் தங்கதமிழ்செல்வனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஸை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஓ.பி.ரவீந்திரநாத் பேசியுள்ளார்.

  தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவரது மகன் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். போடி தொகுதிக்குட்பட்ட மாரியம்மன்கோவில்பட்டி, திருச்செந்தூர், முத்துதேவன்பட்டி, வீரபாண்டி, கொடுவிலார்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், கோவிந்தநகரம் உள்ளிட்;ட இடங்களில் திறந்தவெளி ஜீப்பில் பரப்புரை செய்தார். முன்னதாக திருச்செந்தூர் பகுதியில் பரப்புரை செய்த ஓ.பி.ரவீந்திரன்.

  கடந்த தேர்தல்களில் போடி தொகுதியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என குறைகூறி வரும் தங்கதமிழ்செல்வன், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு பல்வேறு சூழ்ச்சிகளால் தான் வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு ஏதும் செய்யாமல் எம்.எல்.ஏ பதவியை இழந்தார்.

  மேலும் எம்.எல்.ஏ பதவியை இழந்த பிறகு நடைபெற்ற இடைத்தேர்;தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடாமல்;, தேனி பாராளுமன்றத் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தார். அதிமுகவில் இருந்து நன்றாக அனுபவித்து விட்டு வேறொரு கட்சியில் சேர்ந்து ஏதேதோ செய்ய நினைத்தார்.

  ஆனால் அங்கு எதுவும் நடக்காததால், தற்போது திமுகவில் இனைந்துள்ளார். உண்மையில் வேறு எந்த கட்சியில் கூட அவர் சேர்ந்திருக்;கலாம். கருணாநிதி, ஸ்டாலினின் தூண்டுதலால் போடப்பட்ட பொய் வழக்கால் ஜெயலலிதா சிறை செல்வதற்கு காரணமான திமுக கட்சியில் சேர்ந்து கொண்டு இன்று தேர்தலில் போட்டியிடும் தங்க தமிழ்செல்வனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என கடுமையாக சாடினார்.

  தொடர்ந்து பேசிய அவர், துணை முதலமைச்சர் போடி தொகுதிக்கு எதுவும் சொல்லவில்லை எனக் குற்றம் சாட்டி வருபவர்களுக்கு நான் இங்கு சொன்ன திட்டங்கள் எல்லாம் 1சதவீதம் தான் இன்னும் இது போல நூறு மடங்கு திட்டங்கள் போடி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் உங்களுக்கு நோட்டீஸாகவும், வீடியோவாக கூட வெளியிடுவோம் எனக் கூறும் போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் அதற்கு வழிவிட வேண்டும் என்பதற்காக பேச்சை நிறுத்தினார். பின்னர் சாலையில் பொதுமக்கள், மற்றும் வாகனங்கள் நின்றிருந்ததால் கூட்டம் அதிகம் இருந்ததால் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட வேண்டும் என்பதற்காக உரையை நிறுத்திக் கொண்டு அங்கிருந்து ஓ.பி.ரவீந்திரநாத் கிளம்பினார்.
  Published by:Arun
  First published: