கம்பம் : டாக்டர்களை உறைய வைக்கும் வடநாட்டு கும்பல் - போலி சமூக வலைத்தளம் மூலம் பண மோசடி

கம்பம் : டாக்டர்களை உறைய வைக்கும் வடநாட்டு கும்பல் - போலி சமூக வலைத்தளம் மூலம் பண மோசடி

 கம்பத்தில் உள்ள டாக்டர்களின் பேஸ்புக் அக்கவுண்டை போலியாக உருவாக்கி அதன் மூலம் பிறரிடம் பணம் பறிக்கும் வட நாட்டு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

 • Share this:
  கம்பத்தில் உள்ள டாக்டர்களின் பேஸ்புக் அக்கவுண்டை போலியாக உருவாக்கி அதன் மூலம் பிறரிடம் பணம் பறிக்கும் வட நாட்டு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

  வட நாட்டு கும்பல்

  கம்பம் காந்திஜி வீதியில் பாத்திமா கிளினிக் எனும் பெயரில் முன்னாள் தேனி மாவட்ட இணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் சையது சுல்தான் இப்ராஹிம் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு கிளினிக் நடத்தி வருகிறார். இவர் ஊரின் முக்கிய நபர் என்பதால், இவரது பேஸ்புக் அக்கவுண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உட்பட ஏராளமானோர் நண்பர்கள் லிஸ்டில் உள்ளனர்.

  போலி பேஸ்புக் கணக்கு

  இந்த நிலையில் இவரது பெயரில் பேஸ்புக்கில் போலியான முகவரியை தயார் செய்த ஒரு கும்பல், ஏற்கனவே சையது சுல்தான் இப்ரா ஹிம் பேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படங்களை டவுன் லோட் செய்து அதை வைத்து அக்கவுண்ட் ஓப்பன் செய்து இன்பாக்ஸ் மெஜஞ்சரில் அவசர தேவைக்கு பணம் தேவை என்றும், கூகுள்பே மூலம் பணம் அனுப்பவும் என கும்பல் வசூலில் இறங்கியுள்ளது.

  சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள டாக்டர், அவசர தேவைக்கு
  பணம் கேட்கிறார் என எண்ணி அவரது பேஸ்புக் நண்பர்களும் பணம் அனுப்புகின்றனர். இதன் பின் ஓரிரு வாரம் கழித்து அவர்கள் நேரடியாக சந்திக்கும் போது தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவருகிறது.

  பணம் அனுப்பிய கூகுள் பே தொலைபேசி எண்ணை அழைத்தால் அதுவட மொழியில் பேசுகிறது. இதே போல கம்பத்தில் உள்ள அரசு சித்த டாக்டர் ஒருவர் பெயரிலும் போலியான அக்கவுண்ட் ஓபன் செய்து பணம் கேட்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் டாக்டர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

  மருத்துவர்கள் கோரிக்கை

  மேலும் பெரும்பாலான டாக்டர்களை மட்டும் குறி வைத்து வட நாட்டு கும்பல் கைவரிசையை காட்டி வருவதால், கம்பம் பகுதியில் உள்ள மருத்துவர்கள் தங்களின் பிற சமூக வலைத்தளக் கணக்கில் இருந்தோ அல்லது எனது பேஸ்புக் கணக்கில் இருந்து நாங்கள் யாருக்கும் புதிய பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்கவில்லை என்றும், எங்களைப் போன்று, உங்களின் சமூக வலைத்தளங்களில் பணம் கேட்டு ஏதேனும் மெசேஜ் வந்தால், பணம் ஏதும் அளிக்காமல் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று மற்ற நம்பர்களிடம் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இது போன்ற சம்பவம் நடைபெறுவது குறித்து தேனி மாவட்ட காவல் துறை அதிகாரிகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Published by:Vaijayanthi S
  First published: