குச்சனூர் : கொரோனா பரவல் எதிரொலி - சனீஸ்வர பகவான் திருக்கோவில் மூடல்

தேனி கோவில்

தேனி மாவட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்று குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவில் ஆகும். தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் கோவில் சிறப்பு பூஜையுடன் மூடப்பட்டது.

 • Share this:
  கொரோனா பரவல் :-

  தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மே 6 முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இந்த நிலையில், தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் வர வாய்ப்பு உள்ள காரணத்தால் மறு உத்தரவு வரும் வரை கோவிலை மூட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட கோவில் நிர்வாகம் தற்காலிகமாக கோவிலை மூடியது.

  மக்கள் ஏமாற்றம்
  இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டதாவது, ’தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொரோனா கட்டுப்பாடு விதி முறையின் அடிப்படையில் கோயில் நிர்வாக அதிகாரி வி. ரமேஷ் முன்னிலையில் கோவில் நடை பூட்டப்பட்டது. இங்கு, வாரம் தோறும் நடக்கும் பூஜை விசேஷமானதாகும். முன்னறிவிப்பின்றி கோவில் மூடப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
  Published by:Karthick S
  First published: