தேனி: மாணவர்களின் மனச் சோர்வை போக்க இலவச விளையாட்டு பயிற்சி

தேனி: மாணவர்களின் மனச் சோர்வை போக்க இலவச விளையாட்டு பயிற்சி

கொரோனா காலத்தில் மாணவர்கள் மனதளவில் சோர்வடையாமல் இருப்பதற்கு,  இலவசமாக கால் பந்து, சிலம்பம் மற்றும் தியான பயிற்சியை தேனி மாவட்டத்தில் தனியார் ஸ்போர்ட்ஸ் சென்டர் அளித்து வருகிறது‌.

கொரோனா காலத்தில் மாணவர்கள் மனதளவில் சோர்வடையாமல் இருப்பதற்கு,  இலவசமாக கால் பந்து, சிலம்பம் மற்றும் தியான பயிற்சியை தேனி மாவட்டத்தில் தனியார் ஸ்போர்ட்ஸ் சென்டர் அளித்து வருகிறது‌.

 • Share this:
  கொரோனா காலத்தில் மாணவர்கள் மனதளவில் சோர்வடையாமல் இருப்பதற்கு,  இலவசமாக கால் பந்து, சிலம்பம் மற்றும் தியான பயிற்சியை தேனி மாவட்டத்தில் தனியார் ஸ்போர்ட்ஸ் சென்டர் அளித்து வருகிறது‌.

  கொரோனா பரவல் :-
  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வருவதால்   மாணவ-மாணவிகள்  வெளியே சென்று விளையாடுவதையே மறந்து விட்டனர் எனலாம்.
  இலவச பயிற்சி :-
  தேனி மாவட்டம்  அரண்மனை புதூரில் உள்ள முல்லை நகரில் மாணவர்கள் நலன் கருதி புதிதாக மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கால் பந்து, சிலம்பம் மற்றும் இலவச தியான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெனடிக் ஸ்போர்ட்ஸ் சென்டரின் செயலாளர் செந்தில் கூறியதாவது:   \"கடந்த 12 வருடங்களாக எங்களது ஸ்போர்ட்ஸ் கிளப் செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக சிறப்பு பிரிவு தொடங்கப் பட்டுள்ளது. இங்கு, பள்ளிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளால் மனரீதியாக பாதிக்காமல் இருப்பதற்காக இலவசமாக கால் பந்து, சிலம்பம் மற்றும் தியான பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். மேலும், தொழில்முறை விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக  இந்த ஸ்போர்ட்ஸ் சென்டர் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் ஓடியாடி விளையாடுவதன்  மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளி வந்து, உடல் ரீதியாக வலுபெறுவார்கள் என்று நம்புகின்றேன்\" என்றார்.
  Published by:Yuvaraj V
  First published: