தேனி மாவட்டத்தில் முதன்முறையாக புறா பந்தயம்

புறா பந்தயம்

தேனி மாவட்டத்தில் முதல் முறையாக புறா பந்தயப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

 • Share this:
  புறா பந்தயம்

  பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்திருந்த மாரி படத்தில் புறா பந்தயம் முக்கிய கருவாக இடம்பெற்றிருக்கும். இதுபோன்ற, புறா பந்தயம் வெளி நாடுகள் மட்டும் இன்றி நம் நாட்டிலும் நடைபெறுகிறது. அந்தவகையில், முதல்முறையாக தேனி மாவட்டத்தில் புறா பந்தயம் சிறப்பாக நடைபெற்றது.

  புறாக்கள் நெடு தூரம் வரை பறக்கும் திறனுடைய பறவைகள் ஆகும். மன்னர்கள் காலத்தில் கடிதப்போக்குவரத்து மற்றும் தூது ஓலை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது இவ்வகை புறாக்களை நன்கு பயிற்சிகொடுத்துப் பழக்கப்படுத்தி புறா பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இப்போதும் புறாக்களுக்கான பந்தயம் நடைபெறுகிறது. பழக்கப்பட்ட புறாக்கள் வெகுதொலைவில் கொண்டுவிடப்பட்டு அவை தங்கள் கூட்டுக்குத் திரும்பி வரும் நேரத்தை வைத்து இப்பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. புறாக்கள் வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியதாகவும் சாதுவாகவும் காணப்படும்.

  தேனி மாவட்டத்தில் முதல் பந்தயம்

  தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டத்தில் புறாக்களுக்கான பந்தயம் ஆண்டுக்கு ஒரு முறை என தொடர்ச்சியாக நடைபெற்றாலும், தேனி மாவட்டத்தில் இது போன்ற பந்தயங்கள் நடைபெற்றது இல்லை. இந்த நிலையில், முதல் முறையாக தேனி மாவட்டத்தில் தனியார் கிளப் மூலம் புறா பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இப்பந்தயம் கம்பத்தில் இருந்து திருச்சி மற்றும் கம்பத்தில் இருந்து அய்யலூர் வரையிலான இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதன் தூரம் சுமார் 150 கிலோ மீட்டர் மற்றும் 250 கிலோ மீட்டர் ஆகும். இதில் முதலில் வந்தடைந்த 10 புறாக்களுக்கு கம்பத்தில் உள்ள தனியார் மஹாலில் கம்பம் காவல் ஆய்வாளர் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
  Published by:Karthick S
  First published: