கொரோனா தொற்றுக்கு மனைவி பலி - வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவர் தற்கொலை

தற்கொலை செய்துக்கொண்ட தந்தை மகன்

மனைவி மறைவை தாங்கமுடியாமல் கனகராஜன் கடந்த ஒரு மாதமாகவே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். குடும்பத்தில் யாருடனும் அவர் சரியாக பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார்.

 • Share this:
  புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன் (57). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். கனகராஜ் தனது மனைவி மீனா(45) மற்றும் மகன் மனோஜ்குமார் (26) ஆகியோருடன் கிருஷ்ணகிரியில் வாடகைக்கு வீடு எடுத்து  தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீனா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இதுதொடர்பாக அவர் சிகிச்சை எடுத்து வந்தார்.  அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

  இதையடுத்து அவர் கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார். மீனாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லாமல் கொரோனா விதிமுறைப்படி கிருஷ்ணகிரியிலே அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

  Also Read: கருப்புப் பூஞ்சை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்... மருத்துவமனையில் மருந்து கிடைக்க வழி செய்யுங்கள் - அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

  இந்நிலையில் தன் மனைவியின் அஸ்தியை அவரது சொந்த ஊரில் கரைக்க முடிவு செய்தார் கனகராஜ். இதன்காரணமாக  மனைவி மீனாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு மகனுடன் தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்துக்கு விரைந்தார்.  மனோஜ்குமாருடன் நரங்கிப்பட்டு கிராமத்தில்  சில நாட்கள் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மீனாவின் அஸ்தி கரைக்கப்பட்டது.

  மனைவி மறைவை தாங்கமுடியாமல் கனகராஜன் கடந்த ஒரு மாதமாகவே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.  குடும்பத்தில் யாருடனும் அவர் சரியாக பேசாமல் விரக்தியில் இருந்துள்ளார். கனகராஜின் மகன் மனோஜ்குமாரும் தாயின் பிரிவால் கடும் துயரத்தில் இருந்துள்ளார்.  நரங்கிப்பட்டுக்கு வந்ததில் இருந்து இருவரும்  யாருடனும் சகஜமாக பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனவேதனையில் இருந்த கனகராஜனும், மனோஜ்குமாரும் நேற்று இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

  இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கனகராஜன், மனோஜ்குமார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொரோனாவுக்கு மனைவி இறந்த சோகத்தில் கணவன், மகன் தற்கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
  Published by:Ramprasath H
  First published: