தஞ்சாவூர்: 9 லட்சம் மதிப்பில் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல் - தன்னார்வலர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர் ஆக்ஸிஜன்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை தன்னார்வலர்கள் வழங்கியுள்ளனர்.

 • Share this:
  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இதுவரை 200 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தன்னார்வலர்கள் வழங்கியுள்ளதால் தினமும் 200 பேருக்கு கூடுதலாக ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

  9 லட்ச ரூபாய் மதிப்பில் செறியூட்டிகள்
  தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 9 லட்ச ரூபாய் மதிப்பில் 10 ஆக்சிஜன் செறியூட்டி இயந்திரங்களை தஞ்சாவூர் தொழில் வர்த்தக கழகம் வழங்கியது. இதனை பெற்றுக் கொண்டார், தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்.

  மருத்துவமனையில் தயாராகும் படுக்கைகள்

  தஞ்சையில் 72% ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி உள்ளன. இருந்தபோதிலும், பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 500 கூடுதல் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தலா 150 படுக்கைகள் தயாராகி உள்ளது. மேலும், 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும்  200 ஆக்சிஜன் செறியூட்டி எந்திரங்கள் தன்னார்வலர்கள் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 200 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

  ஆக்சிஜன் செறியூட்டி செயல்பாடு

  இன்றைய காலகட்டத்தில் ஆக்சிஜன் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆக்சிஜன் செறியூட்டி 5 எல்.பி.எம் என சொல்லக்கூடியது.  ஐந்து லிட்டர் ஆக்சிஜனை ஒரு நிமிடத்தில் தரக்கூடியதாகும் என தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Karthick S
  First published: